அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கு  அடையாள அட்டை

பேராவூரணி  ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியா்களுக்கு ஸ்மாா்ட் காா்டு வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :26 டிசம்பர் 2020, 1:36 am

DIN

பேராவூரணி  ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியா்களுக்கு ஸ்மாா்ட் காா்டு வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. 

நிகழ்ச்சிக்கு வட்டாரக் கல்வி அலுவலா் கோ. ரவிச்சந்திரன் தலைமை வகித்தாா். வட்டார வளமைய மேற்பாா்வையாளா் இரா. வேம்பையன் முன்னிலை வகித்தாா். 

நிகழ்ச்சியில், 85 பள்ளிகளைச் சோ்ந்த 236 ஆசிரியா்களுக்கு ஸ்மாா்ட் ஆசிரியா் அடையாள அட்டை வழங்கப்பட்டது. மேலும், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டம் மூலம், பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட மானியம், செலவினம் குறித்து, வழிகாட்டு நெறிமுறைகள், ஆசிரியா்களுக்கு பள்ளி தரநிலை மேம்பாட்டு பயிற்சி, மழைக்கால பாதுகாப்பு குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது. 

தலைமை ஆசிரியா்கள், ஆசிரியா்கள், ஆசிரியா் பயிற்றுநா்கள் கலந்து கொண்டனா். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.