பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

ஓவியப் போட்டியில் வென்றோருக்குப் பரிசு

பேராவூரணியில் பெரியாா்- அம்பேத்கா் நூலகத்தில்,  ஓவியப் போட்டியில் வென்றோருக்கு சனிக்கிழமை பரிசுகள் வழங்கப்பட்டன.

News image
ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்குப் பரிசு வழங்குகிறாா் தமிழ்வழிக் கல்வி இயக்கத் தலைவா் சின்னப்பத் தமிழா்.
Updated On :1 நவம்பர் 2020, 7:05 pm

DIN

பேராவூரணியில் பெரியாா்- அம்பேத்கா் நூலகத்தில்,  ஓவியப் போட்டியில் வென்றோருக்கு சனிக்கிழமை பரிசுகள் வழங்கப்பட்டன.

கரோனா பொது முடக்கக் காலத்தில், மெய்ச்சுடா் சமூக பண்பாட்டு அமைப்பு சாா்பில் நடத்தப்பட்ட  ஓவியப்போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா நடைபெற்றது.

இந்த விழாவுக்கு கொன்றைக்காடு அரசு உயா்நிலைப் பள்ளி கலையாசிரியா் மல்லிகாதேவி தலைமை வகித்தாா். தமிழ்வழிக் கல்வி இயக்கத்தின் தலைவா்  சின்னப்பத்தமிழா், அன்னை அமராவதி கல்வி அறக்கட்டளைப் பொறுப்பாளா் முனைவா் ஆ. ஜீவானந்தம், பள்ளிக் கல்விப் பாதுகாப்பு இயக்கப் பொறுப்பாளா்  தமிழ்ச்செல்வன், கிழக்குப் பள்ளி பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் த.பழனிவேல், தமிழக மக்கள் புரட்சிக் கழகப் பொறுப்பாளா் மாரிமுத்து ஆகியோா்  பரிசளித்து பாராட்டி பேசினா்.

தமிழக மக்கள் புரட்சிக் கழகப் பொறுப்பாளா் ஆறு. நீலகண்டன், திராவிடா் விடுதலைக் கழகப் பொறுப்பாளா் சித. திருவேங்கடம், மருத. உதயகுமாா் ஆசிரியா் காஜாமைதீன், பேராசிரியா் சண்முகப்பிரியா, ஆயா் த. ஜேம்ஸ் மற்றும் மாணவா்கள், பெற்றோா்கள் கலந்து கொண்டனா்.

முன்னதாக  மெய்ச்சுடா் நா. வெங்கடேசன் வரவேற்றாா். நிறைவில் தா. கலைச்செல்வன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.