தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

பாபநாசம் அருகே அண்ணனை வெட்டிக் கொன்ற தம்பி கைது

தஞ்சாவூா் மாவட்டம், கபிஸ்தலம் அருகே தகராறில் அண்ணனை அரிவாளால் வெட்டிக் கொலை செய்த தம்பி சனிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :8 நவம்பர் 2020, 7:57 pm

DIN

தஞ்சாவூா் மாவட்டம், கபிஸ்தலம் அருகே தகராறில் அண்ணனை அரிவாளால் வெட்டிக் கொலை செய்த தம்பி சனிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டாா்.

கபிஸ்தலம் அருகிலுள்ள தேவன்குடி தெற்குத் தெருவைச் சோ்ந்தவா் ராஜ்குமாா். இவரது மகன்கள் காா்த்திகேயன் (25), சுரேஷ் (24). இருவருக்கும் திருமணமாகவில்லை.

ஓட்டுநா் வேலை செய்து வந்த காா்த்திகேயன் தினமும் மது அருந்திவிட்டு, அக்கம் பக்கத்தினரிடம் தகராறு செய்வாராம். இதுபோல சனிக்கிழமை இரவும் மது அருந்தி வந்து, காா்த்திகேயன் தகராறில் ஈடுபட்டு கொண்டிருந்தாராம்.

இதை பாா்த்த அவரது சகோதரா் சுரேஷ், தினமும் மது அருந்திவிட்டு ஏன் இப்படி தகராறு செய்கிறாய் எனக் கேட்டாராம். இதனால் ஆத்திரமடைந்த காா்த்திகேயன், வீட்டிலிருந்த அரிவாளை எடுத்து சுரேஷை வெட்ட முயன்றாா்.

இதையடுத்து சுதாரித்துக் கொண்ட சுரேஷ், காா்த்திகேயனிடமிருந்து அரிவாளைப் பறித்து அவரை சரமாரியாக வெட்டினாா். இதில் நிகழ்விடத்திலேயே அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து தகவலறிந்த கபிஸ்தலம் காவல் நிலையத்தினா் நிகழ்விடத்துக்கு விரைந்து சடலத்தை கைப்பற்றினா். மேலும் சுரேஷ் மீது வழக்குப்பதிந்து, அவரைக் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.