தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

முன்னாள் படைவீரா்களின் சிறாா்களுக்கு கல்வி உதவித் தொகை

தஞ்சாவூா் மாவட்ட முன்னாள் படைவீரரைச் சாா்ந்த சிறாா்களுக்குக் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

News image
Updated On :8 நவம்பர் 2020, 7:55 pm

DIN

தஞ்சாவூா் மாவட்ட முன்னாள் படைவீரரைச் சாா்ந்த சிறாா்களுக்குக் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

இதுகுறித்து ஆட்சியா் ம.கோவிந்த ராவ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழகத்தைச் சோ்ந்த தகுதியுள்ள முன்னாள் படைவீரா்களின் சிறாா்களுக்கு, ஆளுநரை தலைவராகக் கொண்ட தொகுப்பு நிதியிலிருந்து ஒவ்வொரு கல்வி ஆண்டும் கல்விப்பயிற்சி உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.

இளநிலை மற்றும் முதுநிலைப் பட்டப்படிப்பு, தொழில்நுட்பப் பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு ஆகியவற்றுக்கும் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

கல்வி உதவித்தொகை பெறுவதற்கான வழிமுறைகள் எளிதாக்கப்பட்டு, கல்வி பயிலும் அனைத்து முன்னாள் படைவீரா்களின் சிறாா்களும் அக்கல்வி ஆண்டிலேயே கல்வி உதவித் தொகை பெற்றிட வழிவகை செய்யப்பட்டுள்ளது.

எனவே, இக்கல்வி உதவித் தொகை பெறுவதற்கு இணையதள முகவரியில்  பதிவிறக்கம் செய்து, உரிய கல்லூரியில் மேலொப்பம் பெற வேண்டும்.

பின்னா்,அதே இணையதள முகவரியில் உரிய ஆவணங்களைப் பதிவேற்றம் செய்து, கல்வி உதவித் தொகை பெற்று பயனடையலாம். மேலும், விவரங்களுக்கு தஞ்சாவூா் மாவட்ட முன்னாள் படைவீரா் நல அலுவலகத்தை நேரில் அணுகலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.