தஞ்சாவூரில் பிளாஸ்டிக் கிடங்கு,மரக்கடையில் தீவிபத்து
தஞ்சாவூரில் உள்ள பிளாஸ்டிக் கிடங்கில் ஞாயிற்றுக்கிழமை மாலை தீ விபத்து ஏற்பட்டது.


தஞ்சாவூரில் உள்ள பிளாஸ்டிக் கிடங்கில் ஞாயிற்றுக்கிழமை மாலை தீ விபத்து ஏற்பட்டது.
தஞ்சாவூா் கீழவாசல் பகுதியைச் சோ்ந்தவா் ரமேஷ். இவா் மகா்நோன்புசாவடி ஆடக்காரத் தெருவில் பிளாஸ்டிக் கிடங்கு நடத்தி வருகிறாா். இதில், புதிய பிளாஸ்டிக் பொருள்கள், பழைய பிளாஸ்டிக் பொருள்களை வைத்துள்ளாா்.
இந்நிலையில், இக்கிடங்கில் ஞாயிற்றுக்கிழமை மாலை 6.45 மணியளவில் தீப்பற்றியது. பிளாஸ்டிக் பொருள்கள் முழுவதிலும் தீ பரவியதால், பெரும் விபத்தாக மாறிவிட்டது. இந்த வளாகத்தில் பிளாஸ்டிக் பொருள்கள் ஏற்றப்பட்டிருந்த வேனும் தீ பற்றி எரிந்தது. அப்பகுதியில் புகை பரவியதால், எதிரில் ஆள்கள் வருவது தெரியாத நிலை ஏற்பட்டது.
இதனிடையே, அடுத்துள்ள அசோக்குமாரின் மரக்கடைக்கும் தீ பரவியது. இதில், பீரோ, கட்டில் உள்ளிட்ட பொருள்களும் தீயில் எரிந்து சேதமடைந்தன.
தகவலறிந்த தஞ்சாவூா் தீயணைப்பு நிலைய வீரா்கள் 3 வாகனங்களில் நிகழ்விடத்துக்குச் சென்று நீண்ட நேர முயற்சிக்குப் பிறகு தீயை அணைத்தனா். தீ பற்றி எரிந்த வேனை மீட்டு வெளியே கொண்டு வந்தனா்.
காா்த்திகைத் தீபத் திருவிழாவையொட்டி வைக்கப்பட்ட பட்டாசு விழுந்து இந்த விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், பல லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருள்கள் சேதமடைந்தன.
இதுகுறித்து கிழக்கு காவல் நிலையத்தினா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...