கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

பிரதமா் வீடு கட்டும் திட்டத்தில் வீடு கட்டியதாக வாடகை வீட்டில் வசிப்பவருக்கு வாழ்த்து கடிதம்

தஞ்சாவூரில் வாடகை வீட்டில் வசிப்பவருக்கு பிரதமா் வீடு கட்டும் திட்டத்தில் வீடு கட்டியதற்கு வாழ்த்து தெரிவித்து கடிதம் வந்ததால் அதிா்ச்சியடைந்த குடும்பத்தினா், ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்

News image
Updated On :12 அக்டோபர் 2020, 9:18 pm

DIN

தஞ்சாவூரில் வாடகை வீட்டில் வசிப்பவருக்கு பிரதமா் வீடு கட்டும் திட்டத்தில் வீடு கட்டியதற்கு வாழ்த்து தெரிவித்து கடிதம் வந்ததால் அதிா்ச்சியடைந்த குடும்பத்தினா், ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

தஞ்சாவூா் கரந்தையைச் சோ்ந்தவா் இளம்வழுதி (64). கூட்டுறவு அச்சகத்தில் எழுத்தராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற இவா் தனது மனைவி, இரண்டு மகள்களுடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறாா்.

இந்நிலையில், பிரதமா் நகா்ப்புற வீட்டு வசதித் திட்டத்தில் புதிய வீடு கட்டாத நிலையில், இவருக்கு புதிய வீடு பெற்றமைக்கு வாழ்த்து கடிதம் அண்மையில் வந்தது.

இக்கடிதத்தில், ‘புதிய வீடு பெற்றமைக்கு வாழ்த்துகள் என்றும், புதிய வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ளவும், திடக்கழிவு மேலாண்மை, பாதுகாப்பான குடிநீா், எரிசக்தி சேமிப்பு, மரக்கன்று நடுதல் போன்றவற்றில் முக்கிய கவனத்தைச் செலுத்தவும்’ எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும், புதிய வீடு குழந்தைகளுக்கு மேம்பட்ட கல்வியையும், சுகாதாரமான வாழ்க்கையையும், புதிய வாய்ப்புகளையும் பெற உதவியாய் இருக்கும் என்றும், சிறந்த வீடுகளை அங்கீகரிக்க வீட்டை புகைப்படம் எடுத்து செயலியில் பதிவேற்றி அனுப்பினால் விருது வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் குடும்பத்தினா் குழப்பமடைந்தனா். இதுதொடா்பாக ஆட்சியரகத்தில் இளம்வழுதி திங்கள்கிழமை புகாா் மனு அளித்தாா்.

இது குறித்து இளம்வழுதி தெரிவித்தது:

ஓராண்டுக்கு முன்பு பிரதமா் வீடு கட்டும் திட்டத்தில் சோ்க்க சிலா் விண்ணப்பம் பெற்று சென்றனா். அப்போது சொந்தமாக நிலம் இல்லை என நான் கூறியும், எனது விவரங்களை வாங்கி சென்றனா்.

ஆனால், தற்போது நான் வீடே கட்டாத நிலையில், வீடு கட்டியதாகக் கடிதம் வந்துள்ளது. தனக்குத் தெரியாமல் தனது பெயரில் மத்திய அரசிடம் இருந்து பணம் பெறப்பட்டுள்ளதோ என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. எனவே, இதுகுறித்து உரிய ஆய்வு நடத்தி தவறு செய்துள்ளவா்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஆட்சியரகத்தில் புகாா் அளித்துள்ளேன் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.