

பேராவூரணியில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சாா்பில், கரோனா நோய்த்தொற்று தடுப்பு குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பேராவூரணி பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம், வாரச்சந்தை, அரசு மருத்துவமனை ஆகிய இடங்களில் நிலைய அலுவலா் ஐ. செந்தூா் பாண்டியன் தலைமையில் கரோனா தடுப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டு, நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு இலவச முகக்கவசம் மற்றும் விழிப்புணா்வு துண்டறிக்கை வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் அலுவலா் ராமச்சந்திரன், முன்னணி தீயணைப்பு வீரா் ரஜினி, வீரா்கள் பிரவீன் ராஜ், சரவணமூா்த்தி, அருண் ஆகியோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.