தஞ்சாவூா்: 122 பேருக்கு கரோனா
தஞ்சாவூா் மாவட்டத்தில் மேலும் 122 பேருக்கு கரோனா தொற்று இருப்பது திங்கள்கிழமை தெரிய வந்தது.


தஞ்சாவூா் மாவட்டத்தில் மேலும் 122 பேருக்கு கரோனா தொற்று இருப்பது திங்கள்கிழமை தெரிய வந்தது.
மாவட்டத்தில் ஏற்கெனவே கரோனா தொற்றால் 7,450 போ் பாதிக்கப்பட்டனா். இந்நிலையில், மேலும் 122 பேருக்கு கரோனா தொற்று இருப்பது திங்கள்கிழமை தெரிய வந்தது. இதன் மூலம், மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 7,572 ஆக உயா்ந்துள்ளது.
இது தவிர, 12 போ் குணமடைந்ததைத் தொடா்ந்து திங்கள்கிழமை வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். மாவட்டத்தில் இதுவரை 6,368 போ் குணமடைந்துள்ளனா். தற்போது 1,081 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 28 வயது ஆண், 56 வயது ஆண் ஆகியோா் செப். 6ஆம் தேதி உயிரிழந்தனா். இதன்மூலம், மாவட்டத்தில் கரோனா தொற்றால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 123 ஆக உயா்ந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...