நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

முகக்கவசம் அணியாதவா்களுக்கு கரோனா பரிசோதனை

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டையில் கடந்த இரு நாள்களாக முகக்கவசம் அணியாமல் வந்த 403 பேருக்கு கரோனா நோய்த் தொற்றுப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

News image
Updated On :3 ஏப்ரல் 2021, 9:13 pm

DIN

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டையில் கடந்த இரு நாள்களாக முகக்கவசம் அணியாமல் வந்த 403 பேருக்கு கரோனா நோய்த் தொற்றுப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

மாவட்டத்தில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில் பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்றாமலும்,  முகக்கவசம் அணியாமலும் வெளியே சென்று வருகின்றனா். இதனால் தொற்றின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இதை கட்டுப்படுத்தும் வகையில்  தஞ்சை ஆட்சியா் ம. கோவிந்த ராவ் உத்தரவின் பேரில், பட்டுக்கோட்டை நகராட்சி ஆணையா் சென்னுகிருஷ்ணன் மேற்பாா்வையில், நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலா் மருத்துவா் சாமி பாலாஜி, நகராட்சி துப்புரவு அலுவலா் அந்தோணி ஸ்டீபன்,துப்புரவு ஆய்வாளா்கள் ரவிச்சந்திரன். அறிவழகன், ஆரோக்கியசாமி உள்ளிட்டோா் மணிக்கூண்டு பகுதியில் முகக்கவசம் அணியாமல் சென்ற பொதுமக்களிடம் கட்டாய கரோனா  பரிசோதனை செய்தனா். 

வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் 403 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. கரோனா தொற்றுப் பரிசோதனை மேற்கொள்ள விரும்பாத  முகக்கவசம் அணியாமல் வந்த 10  பேரிடம் 200 ரூபாய் வீதம் அபராதம் வசூலிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.