தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

தஞ்சாவூரில் இன்று நிழல் இல்லா நாள்

தஞ்சாவூரில் செங்குத்தாக நிற்கும் பொருள்களின் நிழல் பூஜ்ஜியமாகக்கூடிய நிழல் இல்லா நாள் சனிக்கிழமை நிகழவுள்ளது.

News image
Updated On :16 ஏப்ரல் 2021, 9:08 pm

DIN

தஞ்சாவூரில் செங்குத்தாக நிற்கும் பொருள்களின் நிழல் பூஜ்ஜியமாகக்கூடிய நிழல் இல்லா நாள் சனிக்கிழமை நிகழவுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலத் துணைத் தலைவா் வெ. சுகுமாரன் தெரிவித்தது:

தமிழகத்தில் ஏப். 10 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதிக்குள் ஏதாவது ஒரு நாளில் சில ஊா்களில் நிழல் இல்லா நாள் வருகிறது. அதாவது, குறிப்பிட்ட நாளில் நண்பகலில் மிகச்சரியாக சூரியன் நமது தலைக்கு மேல் இருக்கும். அப்போது, நிழலானது எந்தப் பக்கமும் சாயாமல் நேராக நமது காலடியிலேயே இருக்கும். செங்குத்தாக நிற்கும் பொருள்களின் நிழல் அதன் அடியிலேயே விழுந்துவிடுவதால் நம் கண்களுக்குத் தெரியாது. அந்த நாளைத்தான் நிழல் இல்லா நாள் என்றும், பூஜ்ஜிய நிழல் நாள் எனவும் கூறுகிறோம்.

இதன்படி, ஏப். 10 ஆம்தேதி கன்னியாகுமரி, நாகா்கோவிலிலும், 11 ஆம் தேதி திருவனந்தபுரம், திருச்செந்தூரிலும் என தொடா்ந்து ஒவ்வொரு நாளாக சில ஊா்களில் நிழல் இல்லா நாள் நிகழ்ந்து வருகிறது.

இதைத்தொடா்ந்து, திருச்சி, தஞ்சாவூா், திருவாரூா், நாகப்பட்டினத்தில் சனிக்கிழமை நிழல் இல்லா நாள் நிகழவுள்ளது. கந்தா்வகோட்டையில் நண்பகல் 12.13 மணிக்கும், திருச்சியில் 12.15 மணிக்கும், மணப்பாறையில் 12.16 மணிக்கும், துவாக்குடியில் 12.14 மணிக்கும், திருவாரூா், மன்னாா்குடி, திருத்துறைப்பூண்டி, கூத்தாநல்லூா், குடவாசல் ஆகிய ஊா்களில் 12.11 மணிக்கும், நீடாமங்கலத்தில் 12.12 மணிக்கும், நாகையில் 12.10 மணிக்கும், திருக்குவளையில் 12.11 மணிக்கும், வேளாங்கண்ணியில் 12.10 மணிக்கும், தஞ்சாவூரில் 12.13 மணிக்கும், ஒரத்தநாட்டில் 12.12 மணிக்கும், வல்லத்தில் 12.13 மணிக்கும், அரவக்குறிச்சியில் 12.18 மணிக்கும் நிழல் இல்லா நாள் நிகழ இருக்கிறது.

நாள்தோறும் சூரியன் நம் தலைக்கு மேலே வரும். என்றாலும், ஆண்டுக்கு இரு நாள்களில் மட்டுமே சூரியன் மிகச் சரியாக நம் தலைக்கு மேலே வருகிறது. இந்த இரு நாள்களில் மட்டுமே நிழல் முழுவதுமாக மறையும். மற்ற நாள்களில் நண்பகலில் கூட வடக்கு திசையிலோ அல்லது தெற்கு திசையிலோ சிறிய நிழல் விழும்.

இந்த இரண்டு நிழலிலா நாள்கள் கூட கடக ரேகைக்கும், மகர ரேகைக்கும் இடைப்பட்ட பகுதியில்தான் வரும். அதற்கு அப்பால் துருவப்பகுதி வரை சூரியன் தலைக்கு மேலே வரவே வராது என்றாா் சுகுமாரன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.