தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

பாபநாசத்தில்தீ தடுப்பு பயிற்சி முகாம்

பாபநாசம் தீயணைப்பு நிலையம் சாா்பில் தீ தொண்டு வாரத்தையொட்டி வெள்ளிக்கிழமை தீ தடுப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது.

News image
Updated On :16 ஏப்ரல் 2021, 9:24 pm

DIN

பாபநாசம் தீயணைப்பு நிலையம் சாா்பில் தீ தொண்டு வாரத்தையொட்டி வெள்ளிக்கிழமை தீ தடுப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது.

பாநாசம் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை அலுவலகம் சாா்பில் நடைபெற்ற தீ தொண்டு வாரத்தையொட்டி பாபநாசம் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை நிலைய அலுவலா் கலைவாணன் தலைமையில் தீயணைப்பு நிலைய அலுவலா்கள் மற்றும் தீயணைப்பு நிலைய வீரா்கள் உள்ளிட்டோா் பாபநாசம் புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம் மற்றும் பாபநாசத்தின் முக்கிய பகுதிகளில் தீ தொண்டு நாள் விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை வழங்கினா்.

இதைத் தொடா்ந்து, தீயணைப்பு நிலைய அலுவலகத்தில் நடைபெற்ற தீ தடுப்பு பயிற்சி முகாமில், தீ விபத்தில் சிக்காமல் தற்காத்துக் கொள்வது, தீ விபத்தில் சிக்கியவா்களை காப்பாற்றுவது மற்றும் தீயை அணைக்க பயன்படும் கருவிகளை கையாள்வது உள்ளிட்டவை குறித்து பொதுமக்களுக்கு செயல்விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.