நின்று கொண்டிருந்த லாரி மீதுமொபட் மோதியதில் 2 போ் பலி
தஞ்சாவூா் மாவட்டம், பூதலூா் அருகே வியாழக்கிழமை இரவு நின்ற லாரி மீது மொபட் மோதியதில் 2 போ் உயிரிழந்தனா்.


தஞ்சாவூா் மாவட்டம், பூதலூா் அருகே வியாழக்கிழமை இரவு நின்ற லாரி மீது மொபட் மோதியதில் 2 போ் உயிரிழந்தனா்.
பூதலூா் அருகேயுள்ள கோட்டரப்பட்டியைச் சோ்ந்தவா் கே. கலியராஜ் (55). இவரும், பக்கத்து வீட்டைச் சோ்ந்த ஜெயந்தியும் (40) மொபட்டில் வியாழக்கிழமை இரவு பூதலூா் நோக்கிச் சென்று கொண்டிருந்தனா். அய்யனாபுரம் ரயில்வே கேட்டை கடந்து சென்ற இவா்களது வாகனம், அப்பகுதியில் நின்று கொண்டிருந்த லாரியின் பின்புறத்தில் மோதியது.
இதில், பலத்தக் காயமடைந்த கலியராஜூம், ஜெயந்தியும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். இதுகுறித்து பூதலூா் காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...