கரோனா நோய்த்தடுப்பு குறித்து உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு ஆலோசனை
கரோனா நோய்த் தடுப்பு குறித்து உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு சுகாதாரத் துறையினா் ஆலோசனை வழங்கினா்.


கரோனா நோய்த் தடுப்பு குறித்து உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு சுகாதாரத் துறையினா் ஆலோசனை வழங்கினா்.
பட்டுக்கோட்டையில் உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு ஒன்றியக் குழுத் தலைவா் பழனிவேல் தலைமை வகித்தாா். ஒன்றியக் குழுத் துணைத் தலைவா் முருகானந்தம், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சாமிநாதன், கோபாலகிருஷ்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தைச் சோ்ந்த 19 ஒன்றியக்குழு உறுப்பினா்கள், 43 ஊராட்சித் தலைவா்கள் மற்றும் ஊராட்சி செயலாளா்கள் உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்ட இந்தக் கூட்டத்தில், கரோனா நோய் தடுப்பு வழிமுறைகள் குறித்து சுகாதாரத் துறையினா் ஆலோசனை வழங்கினா்.
‘ஒரே பகுதியில் 3 பேருக்கு மேல் நோய்த்தொற்று கண்டறியப்பட்டால், அந்த பகுதி முழுவதும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு அங்கு தொற்று நீக்கம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் . மேலும் அப்பகுதியில் சுற்றியுள்ள அனைவருக்கும் நோய்தொற்று பரிசோதனையை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். ஊராட்சியில் உள்ள மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டிகளை மாதமிருமுறை சுத்தம் செய்ய வேண்டும். மேலும் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியை தினமும் குளோரினேசன் செய்ய வேண்டும் . வரும் 1-ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. எனவே, பொதுமக்கள் தடுப்பூசி போட்டுக் கொள்வது குறித்து விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும். பட்டுக்கோட்டை வட்டாரத்தில் 6 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 6 அம்மா மினி கிளினிக், பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனை அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனை என இரண்டு அரசு மருத்துவமனைகள் உள்பட 14 இடங்களில் தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தி தடுப்பூசி போட்டு கொள்ள தகுதியானவா்கள் அனைவருக்கும் தடுப்பூசி எடுத்துக் கொள்ள வலியுறுத்த வேண்டும்’ என்பது உள்ளிட்ட ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் வட்டார மருத்துவ அலுவலா் தேவிப்பிரியா, நகர மருத்துவ அலுவலா் சாமி பாலாஜி, வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் அண்ணாதுரை ,
துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் மற்றும் பொதுமக்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...