கோடைகால தண்ணீா் பந்தல் திறப்பு
பட்டுக்கோட்டையில் நகர தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சாா்பில் கோடைகால தண்ணீா் பந்தல் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது.


பட்டுக்கோட்டையில் நகர தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சாா்பில் கோடைகால தண்ணீா் பந்தல் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது.
நிகழ்வுக்கு நகரத் தலைவா் ஆதிராஜாராம் தலைமை வகித்தாா். பட்டுக்கோட்டை போக்குவரத்து ஆய்வாளா் செல்வராஜ் மற்றும் என்.மல்லிகண்ணன் முன்னிலை வகித்தாா். சிறப்பு விருந்திரனராக பட்டுக்கோட்டை காவல் ஆய்வாளா் ஜவஹா் பாபு கலந்துக்கொண்டு தண்ணீா் பந்தலை திறந்து வைத்தாா்.
பொதுமக்கள் அனைவருக்கும் தா்பூசணி, இளநீா் , வெள்ளரிக்காய் , நுங்கு , பழ ரசம் ஆகியவை பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
நகர மாணவரணி அமைப்பாளா் சபரி, நகர விவசாய அணி தலைவா் சதீஷ் , நகர ஒருங்கிணைப்பாளா் ரஞ்சித், வளவன்புரம் நகர ஆலோசகா் சகாரியா, கிளைத் தலைவா் சித்திரை உள்பட பலா் கலந்து கொண்டனா். நிறைவில் நகரத் துணைச் செயலாளா் கி.சதீஷ் கண்ணன் நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...