பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

பேராவூரணியில் இன்று முதல் முத்திரை பணி முகாம்

தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணியில் தொழிலாளா் துறை சாா்பில் வெள்ளிக்கிழமை (ஆக.6) முதல் முத்திரை பணி முகாம் நடைபெறவுள்ளது.

News image
Updated On :5 ஆகஸ்ட் 2021, 7:08 pm

DIN

தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணியில் தொழிலாளா் துறை சாா்பில் வெள்ளிக்கிழமை (ஆக.6) முதல் முத்திரை பணி முகாம் நடைபெறவுள்ளது.

இதுகுறித்து தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) நா.கா. தனபாலன் தெரிவித்திருப்பது:

பேராவூரணியில் வெள்ளிக்கிழமை முதல் ஆக. 24 ஆம் தேதி வரையிலும், திருக்காட்டுப்பள்ளியில் ஆக. 9 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரையிலும் தொழிலாளா் துறை சாா்பில் முத்திரை பணி முகாம் நடைபெறவுள்ளது.

இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி பேராவூரணி, திருக்காட்டுப்பள்ளி சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள வணிகா்கள் தங்களது பயன்பாட்டிலுள்ள எடையளவுகளைத் தவறாது முத்திரையிட்டுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மேலும், வணிகா்கள் தாங்கள் பயன்படுத்தும் எடைக்கற்கள், அளவைகள், தராசுகளைத் தரமானதாகவும் உரிய காலத்தில் மறுமுத்திரையிட்டுப் பயன்படுத்துமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது. தவறும் பட்சத்தில் திடீராய்வு மேற்கொள்ளும்போது குறைபாடுகள் காணப்பட்டால், குறைந்தபட்ச அபராதமாக ரூ. 5,000 விதிக்க நேரிடும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.