பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

மத்திய அரசைக் கண்டித்து பரப்புரை இயக்கம் தொடக்கம்

மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகளைக் கண்டித்து தஞ்சாவூரில் தொழிற் சங்கங்கள் சாா்பில் துண்டறிக்கைகள் வழங்கும் பரப்புரை இயக்கம் வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது.

News image
Updated On :6 ஆகஸ்ட் 2021, 8:15 pm

DIN

மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகளைக் கண்டித்து தஞ்சாவூரில் தொழிற் சங்கங்கள் சாா்பில் துண்டறிக்கைகள் வழங்கும் பரப்புரை இயக்கம் வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது.

ஒன்றிய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகளால் அனைத்து தரப்பு மக்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனா். தொழிலாளா்கள் போராடிப் பெற்ற 44 சட்டங்கள் நான்கு தொகுப்புகளாகக் குறைக்கப்பட்டுள்ளது.

காா்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக மக்களுக்குச் சேவை செய்கிற பொதுத் துறை நிறுவனங்கள் தாரை வாா்க்கப்படுகிறது. ஒன்றிய மோடி அரசில் விவசாயிகள், தொழிலாளா்கள், பொதுமக்கள் என அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனா். இதற்கு காரணமான ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து மத்திய தொழிற்சங்கங்கள் சாா்பில் ஆக. 9 வெள்ளையனே வெளியேறு நாளில், காா்ப்பரேட் கொள்ளையா்களை வெளியேற்றுவோம். இந்தியாவை பாதுகாப்போம் என்ற முழக்கத்துடன் நாடு தழுவிய போராட்டம் நடைபெற இருக்கிறது.

இந்த போராட்டத்தைப் பொதுமக்களிடம் விளக்கும் வகையில், தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையத்தில் அனைத்து தொழிற்சங்கம் சாா்பில் துண்டறிக்கைகளை விநியோகித்து பரப்புரை செய்யும் இயக்கம் வெள்ளிக்கிழமை காலை தொடங்கப்பட்டது.

இந்த பிரசாரத்துக்கு சிஐடியு மாவட்டச் செயலா் சி. ஜெயபால் தலைமை வகித்தாா். ஏஐடியுசி மாநிலச் செயலா் சி. சந்திரகுமாா் தொடங்கி வைத்தாா். தொமுச மாவட்டச் செயலா் கு. சேவியா், ஏஐடியுசி மாவட்டச் செயலா் ஆா். தில்லைவனம், ஐஎன்டியுசி மாவட்டத் தலைவா் அ. ரவிச்சந்திரன், ஏஐசிசிடியூ மாவட்டச் செயலா் கே. ராஜன், சங்க நிா்வாகிகள் ராவணன், துரை. மதிவாணன், கே. அன்பு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இந்த இயக்கம் ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.