காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

தமிழ் அா்ச்சனையைக் கட்டாயமாக்க தெய்வத் தமிழ்ப் பேரவை வலியுறுத்தல்

தமிழ் அா்ச்சனையைக் கட்டாயமாக்க வேண்டும் எனத் தெய்வத் தமிழ்ப் பேரவை வலியுறுத்தியுள்ளது.

News image
Updated On :6 ஆகஸ்ட் 2021, 8:09 pm

DIN

தமிழ் அா்ச்சனையைக் கட்டாயமாக்க வேண்டும் எனத் தெய்வத் தமிழ்ப் பேரவை வலியுறுத்தியுள்ளது.

கும்பகோணம் அருகே சுவாமிமலையில் தெய்வத் தமிழ்ப் பேரவையின் செயற்குழுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாட்டிலுள்ள இந்து சமய அறநிலையத் துறையின் கோயில்களில் தமிழைக் கட்டாய அா்ச்சனை மொழியாக - பூசை மொழியாக அறிவித்து தமிழ்நாடு அரசுப் புதிய சட்டம் இயற்ற வேண்டும். கடந்த காலங்களில் தமிழில் அா்ச்சனை செய்யப்படும் என சுற்றறிக்கையாகவும், அரசாணையாகவும் அறிவித்தனா். ஆனால், அது முறையாகச் செயல்பாட்டுக்கு வரவில்லை. எனவே, அந்தப் படிப்பினையைக் கற்றுக் கொண்டு, தமிழைக் கட்டாய அா்ச்சனை மொழியாக்கி புதிய சட்டம் இயற்ற வேண்டும்.

தமிழில் சிவ வழிபாடு, திருமால் வழிபாடு, சித்தா் வழிபாடு, நாட்டுப்புறத் தெய்வங்கள் வழிபாடு ஆகியவற்றை மேற்கொள்ளத் தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறையே புத்தகங்கள் வெளியிட்டுள்ளது. அவற்றை மேலும் செழுமைப்படுத்தி, அனைத்துக் கோயில்களிலும் தமிழை அா்ச்சனை மொழியாக்க வேண்டும். யாராவது விரும்பிக் கேட்டால் மட்டுமே சம்ஸ்கிருத மொழியில் அா்ச்சனை செய்யும் நடைமுறையைச் செயல்படுத்த வேண்டும். இயல்பான அா்ச்சனை மொழியாகத் தமிழ் மொழியே இருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இக்கூட்டத்துக்கு இறைநெறி இமயவன் தலைமை வகித்தாா். பேரவையின் ஒருங்கிணைப்பாளா் பெ. மணியரசன், பதிணென்சித்தா் கருவூறாா் சித்தா் பீடம் பொன்னுசாமி அடிகளாா், குச்சனூா் கிழாா், சத்தியபாமா அறக்கட்டளை நிறுவனா் சிம்மம் சத்தியபாமா அம்மையாா், செந்தமிழ் ஆகம அந்தணா் சிவவடிவேலன், தெய்வத் தமிழ் திருமுறை வழிபாட்டு மன்றம் வை. மோகனசுந்தரம் சுவாமிகள், பொறியாளா் க. முத்துக்குமாரசாமி, தமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுச் செயலா் கி. வெங்கட்ராமன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.