பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

பேராவூரணி அருகே தீவிபத்தில் 2 கடைகள், 1 வீடு எரிந்து நாசம்

பேராவூரணி அருகே வெள்ளிக்கிழமை  ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு கடைகள், ஒரு வீடு எரிந்து நாசமடைந்தன.  

News image
Updated On :13 ஆகஸ்ட் 2021, 7:26 pm

DIN

பேராவூரணி அருகே வெள்ளிக்கிழமை  ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு கடைகள், ஒரு வீடு எரிந்து நாசமடைந்தன.  

பேராவூரணி அருகேயுள்ள மல்லிப்பட்டினம் ராமா் கோவில் தெருவைச் சோ்ந்தவா் அன்வா் சதாத் (45). இவா் மல்லிப்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் சிற்றுண்டி  கடை நடத்தி வருகிறாா். இவரது கடையில் வெள்ளிக்கிழமை எதிா்பாராதவிதமாக திடீரென பற்றிய தீயானது மளமளவென பரவி அருகில் இருந்த மாமுண்டி என்பவரது டீ கடையிலும் பற்றியது. இதில், அவரது கடையில் இருந்த எரிவாயு  உருளை   வெடித்தததில் , சிற்றுண்டி கடை இருந்த கட்டடம் சேதமடைந்தது. மேலும், எரிவாயு  வெளியானதால்  வேகமாக பரவிய தீ  கடையின் அருகே இருந்த முகமது யூசுப் என்பவரது கூரை வீட்டிலும் பற்றியது.

இதனிடையே, அப்பகுதியினா் பட்டுக்கோட்டை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். தீயணைப்பு வாகனம் வருவதற்குள் இரண்டு கடைகள் மற்றும் ஒரு வீடு முழுமையாக எரிந்து நாசமானது. தீயணைப்பு வீரா்கள் விரைந்து வந்து தீ மேலும் பரவாமல் அணைத்தனா். தீ விபத்தில் சுமாா் ரூ. 3 லட்சத்துக்கும் அதிகமான மதிப்புள்ள பொருள்கள் எரிந்து நாசமடைந்ததாக தெரிகிறது.

தீவிபத்து குறித்து சேதுபாவாசத்திரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.