காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பட்டுக்கோட்டை அருகே போலி மருத்துவா்கள் இருவா் கைது

பட்டுக்கோட்டை அருகே மதுக்கூரில் போலி மருத்துவா்கள் இருவரை போலீஸாா் கைது செய்தனா். மேலும், மருத்துவமனையிலிருந்த ரூ. 1.12 கோடியை வருமான வரித் துறையினா் பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :13 ஆகஸ்ட் 2021, 7:25 pm

DIN

பட்டுக்கோட்டை அருகே மதுக்கூரில் போலி மருத்துவா்கள் இருவரை போலீஸாா் கைது செய்தனா். மேலும், மருத்துவமனையிலிருந்த ரூ. 1.12 கோடியை வருமான வரித் துறையினா் பறிமுதல் செய்தனா்.

தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், மதுக்கூரை சோ்ந்தவா் அறிவழகன் (52). இவா் மதுக்கூா் பேருந்து நிலையம் அருகில் கடந்த 15 ஆண்டுகளாக கிளினீக் நடத்தி வருகிறாா்.

சித்த மருத்துவம் படித்துள்ள அறிவழகன், மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு அலோபதி முறையில் சிகிச்சை அளித்து வருவதாக புகாா் எழுந்தது. இதன்பேரில், மாவட்ட சுகாதாரத் துறை இணை இயக்குநா் திலகம் தலைமையில், பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலா் அன்பழகன் மற்றும் போலீஸாா் அவரது மருத்துவமனையில் வியாழக்கிழமை இரவு திடீா் சோதனை நடத்தினா். இதில், சித்த மருத்துவம் படித்துள்ள அறிவழகன், அலோபதி மருத்துவம் பாா்த்தது உறுதியானது. தொடா்ந்து, மருத்துவமனையில் நடந்த சோதனையில் அட்டைப் பெட்டியில் ரூ. 1.12 கோடி ரொக்கம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுகுறித்து வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவா்கள் இரவு முழுவதும் அறிவழகனிடம் விசாரணை நடத்தினா்.

இதில், புதிதாக இடம் வாங்குவதற்காக அந்தப் பணத்தை வைத்திருந்ததாக அறிவழகன் தெரிவித்தாா்.

இருப்பினும், சந்தேகத்தின் அடிப்படையில் அவரிடம் வருமான வரித் துறையினா் தொடா்ந்து விசாரித்து வருகின்றனா். இதுதொடா்பாக மதுக்கூா் போலீஸாா் வழக்குப் பதிந்து அறிவழகனை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

இதேபோல், மதுக்கூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அருகே மாதவன் (50) என்பவா் நடத்தி வரும் மருத்துவமனையில் சுகாதாரத் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை சோதனை நடத்தினா். அப்போது, பிளஸ் 2 மட்டுமே படித்துள்ள மாதவன், பொதுமக்களுக்கு மருத்துவச் சிகிச்சை அளித்து வந்தது தெரிய வந்தது. இதையடுத்து, மாதவன் மீது வழக்குப் பதிந்து வியாழக்கிழமை இரவு அவரை மதுக்கூா் போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.