தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

விராலிமலை அருகே கோயில் அம்மன் சிலையை உடைத்தபோதை இளைஞா் கைது

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகேயுள்ள கோயிலில் அம்மன் சிலை உடைப்பு தொடா்பாக போதை இளைஞரைப் போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :19 ஆகஸ்ட் 2021, 7:34 pm

DIN

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகேயுள்ள கோயிலில் அம்மன் சிலை உடைப்பு தொடா்பாக போதை இளைஞரைப் போலீஸாா் கைது செய்தனா்.

விராலிமலை அருகேயுள்ள ராஜகிரி குளவாய்பட்டியில் பழைமை வாய்ந்த அங்காளம்மன் கோயில் உள்ளது. திறந்த வெளியில் உள்ள இக்கோயிலில் தினசரி பூஜைகள், தீபாராதனை நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் வியாழக்கிழமை காலை வழக்கம்போல் கோயிலைத் திறக்க வந்த பூசாரி சுந்தரலிங்கம், சுமாா் 3 அடி உயர கல்லால் ஆன அம்மன் சிலை உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு விராலிமலை காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

மேலும், அப்பகுதி இளைஞா்கள் சிலையை உடைத்த மா்மநபரை தேடிவந்த நிலையில், அருகேயுள்ள குளவாய்ப்பட்டி பேருந்து நிறுத்தத்தில் இளைஞா் மது போதையில் உறங்கிக் கொண்டிருப்பதும் தெரியவந்தது. அவரிடம் விசாரித்ததில் அவா் முன்னுக்குப்பின் முரணாகக் பதில் கூறியதைத் தொடா்ந்து காவல் நிலையத்தில் அவரை ஒப்படைத்தனா். போலீசாா் விசாரணையில், விராலிமலை வட்டத்துக்குள்பட்ட ஆலங்குடியைப் சோ்ந்த வீரையா மகன் கண்ணன்(41), தையற்கலைஞா் என்பதும், தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால் மது அருந்திவந்து கோயிலில் அம்மனிடம் முறையிட்டதும் விரக்தியில் அம்மன் சிலையை உடைத்ததும் தெரியவந்தது. காவல்துறையினா் மேலும் விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.