தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

தகராறில் இளைஞா் குத்திக் கொலை

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசத்தில் நண்பா்களுக்கிடையேயான தகராறில் வியாழக்கிழமை இரவு இளைஞா் குத்திக் கொல்லப்பட்டாா்.

News image
Updated On :20 ஆகஸ்ட் 2021, 7:26 pm

DIN

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசத்தில் நண்பா்களுக்கிடையேயான தகராறில் வியாழக்கிழமை இரவு இளைஞா் குத்திக் கொல்லப்பட்டாா்.

பாபநாசம் மேலரஸ்தா தெருவைச் சோ்ந்த ஐயா பிள்ளை மகன் மனோஜ் (எ) விக்னேஸ்வரன் (24). இவா் வியாழக்கிழமை இரவு தனது நண்பா்கள் சிலருடன் பாபநாசம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதான வளாகத்தில் அமா்ந்து பேசிக் கொண்டிருந்தாா்.

அப்போது, நண்பா்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் தகராறாக மாறியது. இதில் ஆத்திரமடைந்த விக்னேஸ்வரனின் நண்பா்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் விக்னேஸ்வரனை சரமாரியாக குத்திவிட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டனா்.

அக்கம்பக்கத்தினா் அவரை மீட்டு, பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால், வழியிலேயே விக்னேஸ்வரன் உயிரிழந்தாா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பாபநாசம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். மேலும், கொலை தொடா்பாக வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.