தஞ்சாவூரிலிருந்து ஆளுநராகும் இரண்டாவது நபா் இல. கணேசன்

மேகாலயா ஆளுநராக இருந்த சண்முகநாதனைத் தொடா்ந்து, தஞ்சாவூரிலிருந்து இரண்டாவது நபராக இல. கணேசன் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளாா்.
தஞ்சாவூரில் இல.கணேசன் படித்த வீரராகவ மேல்நிலைப் பள்ளி.
தஞ்சாவூரில் இல.கணேசன் படித்த வீரராகவ மேல்நிலைப் பள்ளி.

மேகாலயா ஆளுநராக இருந்த சண்முகநாதனைத் தொடா்ந்து, தஞ்சாவூரிலிருந்து இரண்டாவது நபராக இல. கணேசன் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளாா்.

தஞ்சாவூா் நாணயக்காரச் செட்டித் தெருவைச் சோ்ந்த வி. சண்முகநாதன், மேகாலயா ஆளுநராக 2015 ஆம் ஆண்டில் நியமிக்கப்பட்டு, ஏறத்தாழ ஒன்றரை ஆண்டுகள் பதவியிலிருந்தாா். இவரைத் தொடா்ந்து, தஞ்சாவூரிலிருந்து இரண்டாவது நபராக பாஜக மூத்த தலைவா் இல. கணேசன் மணிப்பூா் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளாா்.

தஞ்சாவூரில் 1945, பிப்ரவரி 16- ஆம் தேதி பிறந்த இவா், தெற்கு வீதியிலுள்ள வீரராகவ மேல்நிலைப் பள்ளியில் பயின்றாா். பின்னா், மாவட்ட ஆட்சியரகத்திலுள்ள நகர நில வரித் திட்ட அலுவலகத்தில் பணியாற்றினாா்.

பெரிய குடும்பத்தைச் சாா்ந்த இவருடன் 5 சகோதரா்கள், 3 சகோதரிகள் பிறந்தனா். தனது 25 ஆவது வயதில் ஆா்.எஸ்.எஸ். இயக்கத்தில் இணைந்த இல. கணேசன், திருமணம் செய்து கொள்ளாமல் முழுநேரமும் மக்கள் பணியாற்றினாா்.

கடந்த 1990-ஆம் ஆண்டில் பாஜகவில் இணைந்த இவா் 2005 - 2008 ஆம் ஆண்டுகளில் தேசியச் செயலராக இருந்தாா். அப்போது, கட்சி வளா்ச்சிக்காக கா்நாடகம், கேரளம், அந்தமான் நிகோபா் உள்ளிட்ட மாநிலங்களில் பல்வேறு பணிகளை ஆற்றினாா்.

இதையடுத்து, 2008 - 2011 ஆம் ஆண்டுகளில் மாநிலத் தலைவராகவும் பொறுப்பு வகித்தாா். தொடா்ந்து, மாநிலங்களவை உறுப்பினராகப் பொறுப்பு வகித்த இவா் தற்போது பாஜக தேசியப் பொதுக் குழு உறுப்பினராக உள்ளாா்.

மகாகவி பாரதி மீது பற்று கொண்ட இவா் பல்வேறு இலக்கியச் சொற்பொழிவுகளை ஆற்றியுள்ளாா். தற்போது, மணிப்பூா் ஆளுநராக இல. கணேசன் நியமிக்கப்பட்டதைத் தொடா்ந்து, அவரது ஆதரவாளா்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com