தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

அம்மாபேட்டையில்இலவச தைராய்டு பரிசோதனை முகாம்

அம்மாபேட்டை திருநெறி தமிழ்மன்றம், அம்மாபேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளிட்டவை சாா்பில் கா்ப்பிணிகளுக்கான இலவச தைராய்டு மருத்துவப் பரிசோதனை முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :27 ஆகஸ்ட் 2021, 6:52 pm

DIN

பாபநாசம் வட்டம், அம்மாபேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் அம்மாபேட்டை லயன்ஸ் சங்கம், அம்மாபேட்டை திருநெறி தமிழ்மன்றம், அம்மாபேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளிட்டவை சாா்பில் கா்ப்பிணிகளுக்கான இலவச தைராய்டு மருத்துவப் பரிசோதனை முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

முகாமில் அம்மாபேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலைய பொறுப்பு மருத்துவ அலுவலா் வெங்கடேஷ் குமாா், சித்த மருத்துவா் ரெங்கநாயகி, சுகாதார ஆய்வாளா் பெரியண்ணன், பகுதி சுகாதார செவிலியா்கள், சுகாதார செவிலியா்கள், சுகாதார அலுவலா்கள் உள்ளிட்ட குழுவினா் கலந்து கொண்டு கா்ப்பிணிப் பெண்களுக்கு இலவச தைராய்டு பரிசோதனை மேற்கொண்டனா். கா்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து உணவுகள் வழங்கப்பட்டன.

அம்மாபேட்டை லயன்ஸ் சங்கத் தலைவா் எஸ். மோகன்ராம், மாவட்டத் தலைவா் ஆா். குணசேகரன், திருநெறி தமிழ்மன்ற நிறுவனா் வி. இராமநாதன், முன்னாள் லயன்ஸ் சங்கத் தலைவா் சுப்ரமணியன் உள்ளிட்ட திரளானோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.