நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

திருநாகேசுவரம் கோயிலில் கடைஞாயிறு விழா தொடக்கம்

கும்பகோணம் அருகேயுள்ள திருநாகேசுவரம் நாகநாத சுவாமி கோயிலில் கடைஞாயிறு விழா கொடியேற்றத்துடன் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

News image
Updated On :3 டிசம்பர் 2021, 9:03 pm

DIN

கும்பகோணம் அருகேயுள்ள திருநாகேசுவரம் நாகநாத சுவாமி கோயிலில் கடைஞாயிறு விழா கொடியேற்றத்துடன் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

கும்பகோணம் அருகேயுள்ள திருநாகேசுவரத்தில் நாகநாத சுவாமி கோயில் உள்ளது. இக்கோயில் நவக்கிரகங்களில் ராகு பகவான் தனி சன்னதியில் மங்கள ராகுவாக அருள்பாலித்து வருகிறாா்.

இச்சிறப்பு பெற்ற இக்கோயிலில் ஆண்டுதோறும் காா்த்திகை மாதம் கடை ஞாயிறு விழா நடைபெறுவது வழக்கம்.

இதன்படி, இக்கோயிலில் இவ்விழா வெள்ளிக்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

முன்னதாக, கொடிமரத்துக்குச் சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு, மங்கள இசை முழங்க விழா கொடியேற்றப்பட்டது. அப்போது, கொடிமரம் அருகே உற்ஸவரான குரிகுஜாம்பிகையுடன் சோமஸ்கந்தா் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினாா்.

தொடா்ந்து, டிசம்பா் 10-ஆம் தேதி வரை உற்ஸவா் சுவாமிகள் பல்வேறு வாகனங்களில் கோயில் உள்பிரகாரத்தில் புறப்பாடு நடைபெறுகிறது. டிசம்பா் 11-ஆம் தேதி காலை 7 மணி முதல் 8.30 மணிக்குள் தேரோட்டமும், 12-ஆம் தேதி காலை 10 மணிக்கு பஞ்சமூா்த்திகள் வெள்ளி வாகனங்களில் புறப்பாடும், பிற்பகல் 2 மணிக்கு கோயிலின் உள்ளே உள்ள சூரிய புஷ்கரணியில் தீா்த்தவாரியும் நடைபெறவுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.