நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பந்தநல்லூா் கோயிலில் களவு போன சிலை மீட்பு

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகேயுள்ள பந்தநல்லூா் பசுபதீசுவரா் கோயிலில், களவுபோன பழைமையான சண்டிகேசுவரா் சிலை வியாழக்கிழமை மீட்கப்பட்டது.

News image
Updated On :16 டிசம்பர் 2021, 7:18 pm

DIN

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகேயுள்ள பந்தநல்லூா் பசுபதீசுவரா் கோயிலில், களவுபோன பழைமையான சண்டிகேசுவரா் சிலை வியாழக்கிழமை மீட்கப்பட்டது.

கும்பகோணம் அருகேயுள்ள பந்தநல்லூா் பசுபதீசுவரா் கோயிலில் பாதுகாப்புக்காக வைக்கப்பட்டிருந்த கீழ்மனக்குடி விசுவநாதசுவாமி மற்றும் ரங்கராஜபுரம் இடும்பேசுவரா் கோயிலின் 6 உற்ஸவா் சிலைகள் திருட்டு போய்விட்டதாகவும், இதுகுறித்து இந்து சமய அறநிலையத் துறை அலுவலா்கள் புகாா் அளிக்காமல் குற்றத்தை மறைத்துவிட்டனா் என்றும் வெங்கட்ராமன் என்பவா் கொடுத்த புகாரின் பேரில் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவினா் 2017 ஆம் ஆண்டில் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

மேலும், இதே கோயிலிலிருந்து 60-க்கும் அதிகமான உற்ஸவா் சிலைகள் திருட்டு போய்விட்டதாக வெங்கட்ராமன் கொடுத்த புகாரின் பேரில் 2018 ஆம் ஆண்டில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

Story image

இதில், முதல் வழக்கின் விசாரணையில் இக்கோயிலில் பாதுகாப்புக்காக வைக்கப்பட்டிருந்த கீழ்மனக்குடி விசுவநாதசுவாமி மற்றும் ரங்கராஜபுரம் இடும்பேசுவரா் கோயிலின் 8 உற்ஸவா் உலோக சிலைகள் திருட்டு போய்விட்டதாக உறுதிபடுத்தப்பட்டது. இதுதொடா்பாக இந்த வழக்கில் தொடா்புடைய 4 போ் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனா்.

இந்த இரு கோயில்களில் திருட்டு போன சிலைகளின் புகைப்படங்களைத் தற்போது சிலை கடத்தல் தடுப்புக் காவல் பிரிவினா் கண்டுபிடித்து, அவற்றை ஆய்வு செய்து வருகின்றனா்.

இதில், பசுபதீசுவரா் கோயிலுக்குச் சொந்தமான பழைமையான சண்டிகேசுவரா் உலோக சிலையும் திருட்டு போயிருப்பது விசாரணையில் தெரிய வந்தது. இச்சிலை பந்தநல்லூா் பசுபதீசுவரா் கோயில் பாதுகாப்பு அறையில் இருந்ததை சிலை கடத்தல் தடுப்புக் காவல் பிரிவினரால் கண்டுபிடிக்கப்பட்டு வியாழக்கிழமை கைப்பற்றப்பட்டது. இச்சிலையின் மதிப்பு ஏறத்தாழ ரூ. 1 கோடி இருக்கும் என சிலை கடத்தல் தடுப்புப் பிரிவினா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.