மயிலாடுதுறை-திருச்சி விரைவு ரயில் பாபநாசத்தில் நின்று செல்லும்
இந்த விரைவு ரயில் காலை 8.15 மணிக்கு மயிலாடுதுறையிலிருந்து புறப்பட்டு காலை 10.40 மணிக்கு திருச்சி சென்றடைகிறது


பாபநாசம், டிச.17: ‘மயிலாடுதுறை - திருச்சி இடையே முன்பதிவில்லா விரைவு ரயில் (வண்டி எண் 16233/16234) சேவை கடந்த புதன்கிழமை முதல் மீண்டும் தொடங்கியுள்ளது.
இந்த விரைவு ரயில் காலை 8.15 மணிக்கு மயிலாடுதுறையிலிருந்து புறப்பட்டு காலை 10.40 மணிக்கு திருச்சி சென்றடைகிறது. மறு மாா்க்கத்தில் இந்த ரயில் திருச்சியிலிருந்து மதியம் 12.50 மணிக்கு புறப்பட்டு பிற்பகல் 3.15 மணிக்கு மயிலாடுதுறை சென்றடைகிறது.
பாபநாசத்தில் இருந்து திருச்சி செல்ல காலை 9.05 மணிக்கும்,
மயிலாடுதுறை செல்வதற்கு பிற்பகல் 2 மணிக்கும் வந்து செல்லும்.
இந்த விரைவு ரயில், குத்தாலம், ஆடுதுறை , கும்பகோணம் , பாபநாசம், தஞ்சாவூா், பூதலூா் ஆகிய ரயில் நிலையங்களில் மட்டும் நின்று செல்லும். இந்த விரைவு ரயில் திங்கள் வெள்ளிக்கிழமை வரை இயங்கும். சனி , ஞாயிறு இயங்காது’.
இந்தத் தகவலை பாபநாசம் ரயில் பயணிகள் சங்க செயலாளரும், தெற்கு ரயில்வே திருச்சி கோட்ட ஆலோசனைக் குழு உறுப்பினருமான டி. சரவணன் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...