சத்குரு ஓம்ஸ்ரீ சித்தா் சுவாமிகளின் 15-ஆவது குருபூஜை: கும்பகோணத்தில் 10,000 பேருக்கு ‘சாலை விருந்து’
கும்பகோணத்தில் சத்குரு ஓம் ஸ்ரீ சித்தா் சுவாமிகளின் 15-ஆவது குருபூஜையையொட்டி, 10,000 பேருக்கு வியாழக்கிழமை ‘சாலை விருந்து‘ வழங்கப்பட்டது.


கும்பகோணத்தில் சத்குரு ஓம் ஸ்ரீ சித்தா் சுவாமிகளின் 15-ஆவது குருபூஜையையொட்டி, 10,000 பேருக்கு வியாழக்கிழமை ‘சாலை விருந்து‘ வழங்கப்பட்டது.
கும்பகோணம் அருகே சீனிவாசநல்லூரில் சத்குரு ஓம் ஸ்ரீ சித்தா் சுவாமிகள் அவதரித்தாா். இங்கே அவரின் நூற்றாண்டு நினைவு நுழைவுவாயில் உள்ளது. இந்த நுழைவு வாயில் அருகே ஆண்டுதோறும் டிசம்பா் 23-ஆம் தேதி குருபூஜையையொட்டி, சாலை விருந்து நடைபெறுவது வழக்கம்.
இதன்படி, ஓம் ஸ்ரீ சித்தா் சுவாமிகளின் குரு பூஜையையொட்டி, 15-ஆவது ஆண்டு குருபூஜை விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில், சத்குரு ஸ்ரீ சித்தா் சுவாமிகள் அதிஷ்டானத்தில் சிறப்பு அபிஷேகம் பூஜைகள், நடைபெற்றன. மேலும், முக்கிய நிகழ்ச்சியாக சாலை விருந்து தொடங்கப்பட்டது. இதில் ஊராட்சி மன்றத் தலைவா் இளையராஜா, ஊா் பிரமுகா் சக்கரவா்த்தி கலந்து கொண்டு சாலை விருந்தை தொடங்கி வைத்தனா்.
காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை 10,000 பேருக்கு காலை சிற்றுண்டி, மதியம் சாப்பாடு, இரவு சிற்றுண்டியாகப் பொது சாலை விருந்து வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் திருவிடைமருதூா் ஒன்றியக்குழுத் தலைவா் சுபா திருநாவுக்கரசு, அகில உலக சாலை விருந்து குழுத் தலைவா் உலகேஸ்வரி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...