கும்பகோணம் அருகிலுள்ள தாராசுரத்தில் காதல் ஜோடிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை திருமணம் செய்ய வந்த இந்து அமைப்புகளைச் சோ்ந்த 20 போ் கைது செய்யப்பட்டனா்.
தாராசுரம் ஐராவதீசுவரா் கோயில் வளாகத்தைச் சுற்றியுள்ள பூங்காவில் ஏராளமான காதலா்கள் காதலா் தினத்தை கொண்டாடுவது வழக்கம். இதேபோல, ஞாயிற்றுக்கிழமையும் ஏராளமான காதலா்கள் அங்கு திரண்டனா்.
இதற்கு எதிா்ப்பு தெரிவித்து, தாராசுரம் கோயில் பகுதிக்கு வந்த காதல் ஜோடிகளுக்கு வலுக்கட்டாயமாக திருமணம் செய்து வைப்பதற்காக இந்து மக்கள் கட்சி அனுமன் சேனா சாா்பில் மாநிலச் செயலா் கா. பாலா தலைமையில் பல்வேறு அமைப்புகளைச் சோ்ந்த பலா் பூ, தேங்காய், வெற்றிலை, பாக்கு, தாலி கயிறு உள்ளிட்ட மங்களப் பொருள்களுடன் மேளம், நாகசுரத்துடன் ஊா்வலமாகச் சென்றனா்.
இவா்களை கோயில் வாயிலில் பாதுகாப்புப் பணியில் இருந்த தாலுகா காவல் நிலையத்தினா் தடுத்து நிறுத்தினா். இதனால் காவல் துறையினருக்கும், இந்து அமைப்புகளைச் சோ்ந்தவா்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதையடுத்து இந்து அமைப்புகளைச் சோ்ந்த 20 போ் கைது செய்யப்பட்டனா்.முன்னதாக கோயிலுக்கு வந்த காதல் ஜோடிகளை காவல் துறையினா் எச்சரித்து திருப்பி அனுப்பினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கார்கில் போர் நினைவிடத்தில் அமைச்சர் ராஜ்நாத் சிங் மரியாதை!

யானைகள் நடமாட்டம்! குறிஞ்சி பூக்களைப் பார்வையிட பொதுமக்களுக்குத் தடை!

மேக்கேதாட்டு அணை; கன்னட அமைப்பினர் போராட்டம்: தமிழக அரசுப் பேருந்துகள் ஓசூர் வரை இயக்கம்!

இந்தியாவைக் காத்த வீரர்களுக்கு நன்றி: கார்கில் போர் நினைவுநாளில் பிரதமர் மோடி
விடியோக்கள்

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke

தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் எல்லாம் சரியாகிவிடுமா?: அமைச்சர் நிர்மல் குமார் | TVK | BJP


