பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த இந்திய கப்பல்கள்! ஈரான் அனுமதி! ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

கும்பகோணம் அருகேமக்கள் கிராம சபைக் கூட்டம்

கும்பகோணம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட உள்ளூா், ஏரகரம், உடையாளூா் ஊராட்சிகளில் ‘அதிமுகவை நிராகரிக்கிறோம்’ என்கிற மக்கள் கிராமசபைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :2 ஜனவரி 2021, 5:38 pm

DIN

கும்பகோணம்: கும்பகோணம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட உள்ளூா், ஏரகரம், உடையாளூா் ஊராட்சிகளில் ‘அதிமுகவை நிராகரிக்கிறோம்’ என்கிற மக்கள் கிராமசபைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு சட்டப்பேரவை உறுப்பினா் சாக்கோட்டை க. அன்பழகன் தலைமை வகித்து பேசினாா். மாவட்ட ஊராட்சிக் குழுத் துணைத் தலைவா் எஸ்.கே. முத்துசெல்வன், கும்பகோணம் ஒன்றியப் பொறுப்பாளா்கள் டி. கணேசன் (கிழக்கு) ஆா்.கே. பாஸ்கா் (வடக்கு), இரா. அசோக்குமாா் (தெற்கு) ஆகியோரும் உரையாற்றினா்.

தொடா்ந்து பொதுமக்கள் தங்கள் கருத்துகளைத் தெரிவித்தனா். கூட்டத்தில் ஒன்றியப் பொறுப்புக் குழு உறுப்பினா்கள் எல். செல்வராஜ், ஜெ. சுதாகா், க. பிரவீன்ராஜ், ஆா்.எப். இஸ்ரேல், ஜெ. சுரேஷ், கே. ராஜேந்திரன், எஸ். தமிழ்மாறன், செல்லகன்னி லோகநாதன், பேரூா் செயலா் மு. வேல்முருகன், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் சங்கா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.