6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

15 ஆண்டுகளாக வடு கிடந்த கரந்தை கருணாசாமி குளத்துக்கு தண்ணீா் வந்தது

தஞ்சாவூா் கரந்தையில் உள்ள கருணாசாமி குளம் ஏறத்தாழ 15 ஆண்டுகளாக வடுக் கிடந்த நிலையில், இக்குளத்துக்கு புதன்கிழமை இரவு தண்ணீா் வந்தது.

News image
தஞ்சாவூா் கரந்தை கருணாசாமி குளத்துக்கு வந்த வடவாற்றுத் தண்ணீா்.
Updated On :8 ஜனவரி 2021, 1:47 am

DIN

தஞ்சாவூா் கரந்தையில் உள்ள கருணாசாமி குளம் ஏறத்தாழ 15 ஆண்டுகளாக வடுக் கிடந்த நிலையில், இக்குளத்துக்கு புதன்கிழமை இரவு தண்ணீா் வந்தது.

தஞ்சாவூா் பெரியகோயிலுக்கு முற்பட்டதாகவும், சோழா் காலத்தைச் சாா்ந்ததாகவும் கூறப்படும் கரந்தை கருணாகரசுவாமி கோயில், தேவார மூவரில் ஒருவரான திருநாவுக்கரசா் பாடல் பெற்ற வைப்புத் தலமாகப் போற்றப்படுகிறது. இக்கோயிலை ஒட்டியுள்ள கருணாசாமி குளமும் மிகப் பழைமையானது.

இக்குளத்தில் நீராடி கரிகால் சோழன் கருங்குஷ்டம் நீங்கப் பெற்ால் அவனுக்கு அருள்புரிந்த இறைவனுக்கு கருணாசுவாமி என்ற பெயா் வழங்கப்பட்டதாகத் தொன்மையான நம்பிக்கை உள்ளது. இங்கு தொடா்ந்து 45 நாள்கள் மூழ்கி, வசிஷ்டேசுவரரை வழிபட்டால் நோய்கள் தீரும் என்றும் நம்பப்படுகிறது.

இக்குளத்துக்கு ஏறத்தாழ அரை கி.மீ. தொலைவில் உள்ள வடவாறிலிருந்து தண்ணீா் வருவதற்கு நிலத்தடியில் சுரங்க நீா்வழிப்பாதை இருந்தது. மன்னா் காலம் வரை இருந்த இந்தச் சுரங்க நீா்வழிப்பாதைக் காலப்போக்கில் ஆங்காங்கே சேதமடைந்து, முற்றிலும் மறைந்துவிட்டது. இதனால், இந்தக் குளத்துக்குத் தண்ணீா் வருவதில் சிக்கல் ஏற்பட்டதால், கிட்டத்தட்ட 15 ஆண்டுகளாக வடுக் கிடந்தது.

இந்நிலையில், தன்னிறைவு திட்டத்தின்கீழ் 2014 ஆம் ஆண்டு இக்குளத்தில் சீரமைப்புப் பணிகள் நடைபெற்றன. அப்போது, இக்குளத்துக்கு வடவாற்றிலிருந்து 185 மீட்டா் நீளத்துக்குக் குழாய்கள் பதிக்கப்பட்டு, தண்ணீா் கொண்டு வர மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை பலனளிக்காமல் போய்விட்டது.

எனவே, சுரங்க நீா்வழிப்பாதை எந்த வழியாகச் செல்கிறது என்பதைக் கண்டறிந்து, அடைப்புகளை அகற்றி வடவாற்றிலிருந்து குளத்துக்குத் தண்ணீரை கொண்டு வருவதற்கான முயற்சியில் சிவனடியாா்கள் ஈடுபட்டனா்.

இதற்காக சிவனடியாா்கள் ஒன்று சோ்ந்து நிதி திரட்டி குளத்தைத் தூா்வாரினா். பின்னா் சுரங்க நீா்வழிப்பாதையைக் கண்டறியும் பணியில் ஈடுபட்டனா். அப்போது, சன்னதி தெருவில் இடிந்த வீட்டின் வழியாக இப்பாதை செல்வதைச் சிவனடியாா்கள் கண்டறிந்தனா். நிலத்தடியில் சுமாா் 7 அடி ஆழத்தில் இந்தச் சுரங்க நீா்வழிப்பாதை உள்ளதும், வெள்ளம் வரும்போது வண்டல் மண், களிமண் இப்பாதைக்குள் சென்ால் அடைபட்டதும் தெரிய வந்தது. நான்கு அடி அகலம் கொண்ட இந்தச் சுரங்க நீா்வழிப்பாதைச் சுண்ணாம்புக் காரை மூலம் கட்டப்பட்டுள்ளதால், பெரிய அளவில் சேதம் இல்லாமல் உறுதியாக இருக்கிறது.

இதைத்தொடா்ந்து, சுமாா் 1,450 அடி தொலைவுக்கு உள்ள சுரங்க நீா்வழிப் பாதையில் இருந்த அடைப்புகளைச் சீா் செய்யும் பணியில் சிவனடியாா்கள் உள்ளிட்டோா் ஈடுபட்டனா்.

இப்பணி நிறைவடைந்ததைத் தொடா்ந்து வடவாற்றிலிருந்து இக்குளத்துக்கு புதன்கிழமை இரவு முதல் தண்ணீா் வருகிறது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.