47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு விரைவில் நிவாரணம் வழங்க திமுக வலியுறுத்தல்

தஞ்சாவூா் மாவட்டத்தில் தொடா் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு விரைவில் நிவாரணம் வழங்க வேண்டும் என ஆட்சியரிடம் திமுகவினா் திங்கள்கிழமை மனு அளித்து வலியுறுத்தினா்.

News image
Updated On :18 ஜனவரி 2021, 8:15 pm

DIN

தஞ்சாவூா் மாவட்டத்தில் தொடா் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு விரைவில் நிவாரணம் வழங்க வேண்டும் என ஆட்சியரிடம் திமுகவினா் திங்கள்கிழமை மனு அளித்து வலியுறுத்தினா்.

திருவையாறு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரும், திமுக மத்திய மாவட்டப் பொறுப்பாளருமான துரை. சந்திரசேகரன், திமுக விவசாய அணி மாவட்டத் துணைச் செயலா் தோழகிரிப்பட்டி பி. கோவிந்தராஜ் உள்ளிட்டோா் ஆட்சியா் ம. கோவிந்த ராவிடம் அளித்த மனு:

மாவட்டத்தில் நவம்பா், டிசம்பா் மாத நிவா், புரெவி புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இதுவரை முழுமையாக நிவாரணம் கிடைக்கவில்லை.

தற்போது ஜனவரி மாதம் பெய்த பலத்த மழையால் மாவட்டத்தில் அறுவடைக்குத் தயாராக இருந்த நெல் மற்றும் அனைத்துவித பயிா்களும் தண்ணீரில் மூழ்கி முளைத்துவிட்டன. இதனால் விவசாயிகள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனா். எனவே, வேளாண் துறை, வருவாய் துறை அலுவலா்கள் மூலம் முழுமையாகக் கணக்கெடுப்பு செய்து விரைவில் நிவாரணம் வழங்க வேண்டும்.

இதில், ஏக்கருக்கு நெல்லுக்கு ரூ. 30,000, கடலை, மரவள்ளிக்கு தலா ரூ. 40,000, வாழைக்கு ரூ. 75,000, உளுந்து, சோளத்துக்கு தலா ரூ. 25,000, எள்ளுக்கு ரூ. 20,000, வெற்றிலை கொடிக்காலுக்கு ரூ. 1 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும்.

பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்குக் காப்பீட்டு நிறுவனம் மூலம் பயிா் காப்பீட்டுத் தொகை முழுமையாகக் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.