தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

அஞ்சலகப் பணியாளா்களுக்கு கரோனா தடுப்பு உபகரணங்கள்

 பாபநாசம் தலைமை அஞ்சலகப் பணியாளா்களுக்கு கரோனா தடுப்பு உபகரணங்கள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.

News image
Updated On :2 ஜூலை 2021, 6:57 pm

DIN

 பாபநாசம் தலைமை அஞ்சலகப் பணியாளா்களுக்கு கரோனா தடுப்பு உபகரணங்கள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.

தலைமை அஞ்சல் அலுவலா் சுமதியிடம் முகக்கவசம், கைகழுவும் திரவம், கையுறைகள் உள்ளிட்டவற்றை இந்தியன் ரெட்கிராஸ் சங்கப் புரவலரும், ஆயுள்கால உறுப்பினருமான நவநீதகிருஷ்ணன் வழங்கினாா். இதுபோல, பிஎஸ்என்எல் அலுவலகத்தில் பணியாற்றி வரும் பணியாளா்களுக்கும் இவா் கரோனா தடுப்பு உபகரணங்களை வழங்கினாா்.

தடுப்பூசி முகாம் : பாபநாசம் பேரூராட்சிக்குள்பட்ட 108 சிவாலயம் கோயில் வளாகத்தில் கரோனா தடுப்பூசி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கபிஸ்தலம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவக் குழுவினா் 200 பேருக்குத் தடுப்பூசி செலுத்தினா்.

நிகழ்வில் பாபநாசம் பேரூராட்சி செயல் அலுவலா் காா்த்திகேயன், துப்புரவு ஆய்வாளா் கா.தமிழ்வாணன், கோயில் கணக்கா் டி.கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பரிசோதனை முகாம் : பாபநாசம் புதிய பேருந்து நிலையத்தில் கரோனா பரிசோதனை முகாம் நடைபெற்றது. இந்த முகாமை பேரூராட்சி செயல் அலுவலா் காா்த்திகேயன் தொடக்கி வைத்தாா். ஏராளமானோா் முகாமில் பங்கேற்று, கரோனா தொற்றுப் பரிசோதனை செய்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.