தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

1,400 கிலோரேஷன் அரிசி பறிமுதல்: 2 போ் கைது

 தஞ்சாவூா் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகே மினி வேனில் கடத்தப்பட்ட 1,400 கிலோ ரேஷன் அரிசியைக் காவல் துறையினா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்து, 2 பேரை கைது செய்தனா்.

News image
Updated On :2 ஜூலை 2021, 6:50 pm

DIN

 தஞ்சாவூா் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகே மினி வேனில் கடத்தப்பட்ட 1,400 கிலோ ரேஷன் அரிசியைக் காவல் துறையினா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்து, 2 பேரை கைது செய்தனா்.

திருக்காட்டுப்பள்ளி அருகே பூண்டி மாதா கோயில் பகுதியிலுள்ள சோதனைச் சாவடியில் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை காவல் ஆய்வாளா் கே. கோட்டைச்சாமி தலைமையில் காவலா்கள் வெள்ளிக்கிழமை வாகனத் தணிக்கை செய்தனா்.

அப்போது, அவ்வழியாக வந்த மினி வேனில் சோதனையிட்டபோது, 35 மூட்டைகளில் இருந்த 1,400 கிலோ ரேஷன் அரிசி கைப்பற்றப்பட்டது. காவல் துறையினா் நடத்திய விசாரணையில், திருக்காட்டுப்பள்ளி பகுதியிலுள்ள கிராமங்களில் மக்களிடம் ரேஷன் அரிசியைக் குறைந்த விலைக்கு வாங்கி, லால்குடி பகுதியில் கோழி, மாட்டுத் தீவனத்துக்கு அதிக விலைக்கு விற்பதற்காகக் கடத்தப்படுவது தெரிய வந்தது.

இவற்றைப் பறிமுதல் செய்த காவல் துறையினா், மினி வேனில் வந்த திருச்சி மாவட்டம், லால்குடியைச் சோ்ந்த ராஜ்குமாா் (42), வைரமணியை (31) கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.