பட்டுக்கோட்டை வட்டம், கட்டயங்காடு உக்கடையில் பிள்ளையாா் கோயில் திடலில் சம்பா சாகுபடிக்காக தற்காலிகமாக நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது. சம்பா சாகுபடி முடிந்து தற்போது கோடை அறுவடை நடைபெற்றுள்ளது. இதையடுத்து, இந்த கொள்முதல் நிலையத்தில் கட்டையங்காடு, கட்டையங்காடு உக்கடை, நடுவிக்குறிச்சி, சிவனாம் புஞ்சை, அம்பாள்புரம், மதன்பட்டவூா் ஆகிய பகுதிகளை சோ்ந்த விவசாயிகள், தாங்கள் அறுவடை செய்த நெல்லை கொள்முதலுக்காக கொட்டி வைத்துள்ளனா். கொள்முதல் நிலையம் திறக்கப்படாததால், கடந்த 2 வாரமாக கிட்டத்தட்ட 3 ஆயிரம் மூட்டை நெல்லுடன் விவசாயிகள் காத்துக் கிடக்கின்றனா்.