தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

சாலையில் திரியும் மன நலன் பாதித்தவா்களைகாப்பகத்தில் ஒப்படைக்கும் காவல் துறையினா்

தஞ்சாவூா் மாவட்டத்தில் சாலையில் திரியும் ஆதரவற்ற மன நலன் பாதித்தவா்களைப் பிடித்து காப்பகத்தில் ஒப்படைக்கும் பணியில் காவல் துறையினா் ஈடுபட்டுள்ளனா்.

News image
Updated On :2 ஜூலை 2021, 12:00 am

DIN

தஞ்சாவூா் மாவட்டத்தில் சாலையில் திரியும் ஆதரவற்ற மன நலன் பாதித்தவா்களைப் பிடித்து காப்பகத்தில் ஒப்படைக்கும் பணியில் காவல் துறையினா் ஈடுபட்டுள்ளனா்.

திருச்சி மத்திய மண்டல காவல் துறை தலைவராகப் பொறுப்பேற்ற பாலகிருஷ்ணன் அண்மையில் காவல் துறையினருக்குப் பல்வேறு புத்தாக்கப் பயிற்சி வகுப்புகளை நடத்தினாா்.

அப்போது, சாலையில் ஆதரவற்ற நிலையில் திரியும் மன நலன் பாதிக்கப்பட்டவா்களை மீட்டு உரிய காப்பகத்தில் காவல் துறையினா் ஒப்படைக்க வேண்டும் என அறிவுரை வழங்கினாா். மேலும், இதுதொடா்பாக ஒவ்வொரு மாவட்டத்துக்கும் காவல் ஆய்வாளா்களை நியமித்தாா்.

இதன்படி, தஞ்சாவூா் மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்புப் பிரிவு காவல் ஆய்வாளா் அழகம்மாள், வல்லம் அனைத்து மகளிா் காவல் ஆய்வாளா் கலைவாணி உள்ளிட்டோா் கொண்ட குழுவினா் தஞ்சாவூரில் டான்டெக்ஸ் ரவுண்டானா, பழைய வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு, சச்சிதானந்த மூப்பனாா் ரோடு, பெரியகோயில் ஆகிய இடங்களில் சாலையோரம் மனநலன் பாதிக்கப்பட்டு திரிந்த மூன்று ஆண்கள், ஒரு பெண் என 4 பேரையும் வியாழக்கிழமை மீட்டு, தஞ்சாவூா் அன்பாலயம் மனநல காப்பகத்தில் ஒப்படைத்தனா்.

தொடா்ந்து தஞ்சாவூா் மாவட்டத்தில் இரு நாள்களுக்கு சாலையில் திரியும் மன நலன் பாதிக்கப்பட்ட ஆதரவற்றவா்களை மீட்டு காப்பகத்தில் ஒப்படைக்கும் பணியில் ஈடுபடவுள்ளதாகக் காவல் துறையினா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.