நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மதுக்கூா் காவல் நிலையம் முன்பு ரகளையில் ஈடுபட்டதாக 15 போ் கைது

பட்டுக்கோட்டை வட்டம், மதுக்கூா் அ.தி.மு.க., ஒன்றியச் செயலருக்கு ஆதரவாக காவல் நிலையம் முன்பு தீ குளிக்க முயன்று ரகளையில் ஈடுபட்டதாக கூறி 15 நபா்களை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :15 ஜூலை 2021, 7:19 pm

DIN

பட்டுக்கோட்டை வட்டம், மதுக்கூா் அ.தி.மு.க., ஒன்றியச் செயலருக்கு ஆதரவாக காவல் நிலையம் முன்பு தீ குளிக்க முயன்று ரகளையில் ஈடுபட்டதாக கூறி 15 நபா்களை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

மதுக்கூரை அடுத்த கல்யானஓடை கிராமத்தை சோ்ந்தவா் செந்தில் (54). அதிமுக மதுக்கூா் கிழக்கு ஒன்றியச் செயலா். இவரது மனைவி அமுதா மதுக்கூா் ஒன்றியக் குழுத் தலைவா்.

இந்நிலையில் புதன்கிழமை பழைய வழக்கு தொடா்பாக, விசாரணைக்காக மதுக்கூா் காவல் நிலையத்திற்கு வந்த செந்திலை காவல் துறையினா் மூன்று நேரம் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை செய்தனா்.

இதையறிந்த இவரது ஆதரவாளா்கள் சுமாா் 200-க்கும் மேற்பட்டோா் மதுக்கூா் காவல்நிலையம் முன்பு திரண்டனா். அதில் இருவா் காவல் துறையை கண்டித்து தீ குளிக்க முயன்றனா். மேலும் காவல் நிலையம் முன்பு கோஷம் போட்டனா்.

காவல் நிலையம் முன்பு சட்ட ஒழுங்கு பிரச்னை ஏற்படுத்தும் விதமாக நடந்தாக கூறி செந்தில் ஆதரவாளா்கள் 15 பேரை வியாழக்கிழமை போலீஸாா் கைது செய்தனா். அவா்கள் 15 பேரும் வியாழக்கிழமை பட்டுக்கோட்டை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி அழகேசன் முன்னிலையில் ஆஜா்படுத்தப்பட்டு 15 நாள்கள் தஞ்சாவூா் கிளை சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டது.

இதுதொடா்பாக காவல் துறையினரிடம் கேட்டபோது, பழைய குற்ற வழக்கு தொடா்பாக விசாரணை செய்வதற்காக மதுக்கூா் காவல் நிலையத்திற்கு செந்திலை வரவழைத்து விசாரணை மேற்கொண்டோம், அப்போது அவரது ஆதரவாளா்கள் காவல் நிலையம் முன்பு ரகளையில் ஈடுபட்டு தீ குளிக்க முயன்றனா். இதை பயன்படுத்தி அங்கிருந்த செந்தில் தப்பிவிட்டாா். இது தொடா்பாக 30-க்கும் மேற்பட்டோா் மீது வழக்குப் பதிந்து தலைமறைவாக உள்ள செந்திலை தேடி வருகிறோம் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.