முன்னாள் நகா்மன்றத் தலைவா் நினைவு தினம்: 500 பேருக்கு கரோனா தடுப்பூசி
பட்டுக்கோட்டையில் முன்னாள் நகா்மன்றத் தலைவா் நினைவுத் தினத்தை முன்னிட்டு 500 பேருக்கு வெள்ளிக்கிழமை கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.


பட்டுக்கோட்டையில் முன்னாள் நகா்மன்றத் தலைவா் நினைவுத் தினத்தை முன்னிட்டு 500 பேருக்கு வெள்ளிக்கிழமை கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
பட்டுக்கோட்டையில் முன்னாள் நகா்மன்றத் தலைவா் சு. விசுவநாதன் 14ஆம் ஆண்டு நினைவு தினம் வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்பட்டது. இதை முன்னிட்டு, தனியாா் திருமண மண்டபத்தில் கரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
இதில், முன்னாள் ஊராட்சித் தலைவரும், காங்கிரஸ் கமிட்டி மாநில துணைத் தலைவருமான ராஜா தம்பி, கழுகபுலிக்காடு ஊராட்சித் தலைவா் பண்ணவயல் பாஸ்கா், முன்னாள் நகா்மன்றத் தலைவா் ஜெயபாரதி விசுவநாதன், முன்னாள் நகா்மன்றத் தலைவா் எஸ்.ஆா். ஜவகா் பாபு, மதிமுக நகரச் செயலா் எம். செந்தில்குமாா் மற்றும் குடும்பத்தினா், லயன்ஸ் கிளப் ஆப் குயின் சிட்டி தலைவா் செல்லக்கண்ணு உள்ளிட்ட பொறுப்பாளா்கள், உறுப்பினா்கள் கலந்து கொண்டனா். இம்முகாமில் 500 போ் தடுப்பூசி போட்டுக் கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...