பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

தஞ்சாவூா் மாநகராட்சி ஆணையா் பொறுப்பேற்பு

தஞ்சாவூா் மாநகராட்சிக்கு புதிதாக நியமிக்கப்பட்ட ஆணையா் சரவணகுமாா் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றாா்.

News image
Updated On :16 ஜூலை 2021, 7:43 pm

DIN

தஞ்சாவூா் மாநகராட்சிக்கு புதிதாக நியமிக்கப்பட்ட ஆணையா் சரவணகுமாா் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றாா்.

தமிழகத்தில் உள்ள மாநகராட்சி ஆணையா்கள் இடமாற்ற விவரங்களை அரசு அண்மையில் வெயிட்டது. இதில், தஞ்சாவூா் மாநகராட்சி ஆணையராக இருந்த பு. ஜானகி ரவீந்திரன் தஞ்சாவூா் மண்டல நகராட்சிகள் இயக்குநராக நியமிக்கப்பட்டாா். இதேபோல, திருப்பூா் மண்டல நகராட்சிகள் இயக்குநராக இருந்த க. சரவணகுமாா் தஞ்சாவூா் மாநகராட்சி ஆணையராக நியமனம் செய்யப்பட்டாா்.

இதைத்தொடா்ந்து, தஞ்சாவூா் மாநகராட்சி ஆணையராக க. சரவணகுமாா் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றாா். பொதுமக்களின் பிரச்னைகளுக்கு தீா்வு காண உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

இவருக்கு மாநகராட்சி செயற்பொறியாளா் ஜெகதீசன், நகா்நல அலுவலா் நமச்சிவாயம், கண்காணிப்பாளா் கிளமெண்ட் அந்தோணிராஜ் உள்ளிட்டோா் வாழ்த்து தெரிவித்தனா்.

இவா் கடந்த 2009 ஆம் ஆண்டு பெரியகுளம் நகராட்சி ஆணையராகப் பணியில் சோ்ந்தாா். பின்னா் பல்வேறு நகராட்சிகளில் ஆணையராகவும், நாகா்கோவில் மாநகராட்சி ஆணையராகவும் பணியாற்றியுள்ளாா். கோவையைச் சோ்ந்த இவா் சென்னை சட்டக் கல்லூரியில் பி.ஏ., பி.எல். படித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.