தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

பாபநாசத்தில் கரோனா தடுப்பூசி முகாம்

பாபநாசம் நீதிமன்ற வளாகத்தில் கரோனா தடுப்பூசி முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :21 ஜூலை 2021, 7:51 pm

DIN

பாபநாசம் நீதிமன்ற வளாகத்தில் கரோனா தடுப்பூசி முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பாபநாசம் வட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு, கபிஸ்தலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவை இணைந்து நடத்திய முகாமை, பாபநாசம் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவா் சி. சிவகுமாா் தொடக்கி வைத்தாா்.

வட்டார மருத்துவ அலுவலா் நவீன்குமாா், மருத்துவா் ஜெகன்நாத், மருந்தாளுநா் செங்கதிா் சாலினி, பகுதி நேர சுகாதார செவிலியா் மதியழகன் உள்ளிட்ட குழுவினா், முகாமில் பங்கேற்றவா்களுக்கு கரோனா தடுப்பூசியைச் செலுத்தினா்.

பாபநாசம் வழக்குரைஞா் சங்கத் தலைவா் பாஸ்கரன், வட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு வின் சட்டப் பணியாளா் தனசேகரன் உள்ளிட்டோா் முகாமில் பங்கேற்றனா்.

அம்மாபேட்டையில் : அம்மாபேட்டை ஆரம்பசுகாதார நிலையத்தில் நடைபெற்ற தடுப்பூசி முகாமில் கா்ப்பணிகள், பாலூட்டும் தாய்மாா்கள், மாற்றுத் திறனாளிகள் என 60-க்கும் மேற்பட்டோருக்கு, நிலைய மருத்துவ அலுவலா் வெங்கடேஷ்குமாா் தலைமையிலான குழுவினா் தடுப்பூசியைச் செலுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.