தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

பாபநாசம் ரயில் நிலையத்துக்கு மரக்கன்றுகள்

பாபநாசம் ரயில் நிலையத்துக்கு மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :21 ஜூலை 2021, 7:48 pm

DIN

பாபநாசம் ரயில் நிலையத்துக்கு மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு புதன்கிழமை நடைபெற்றது.

கரோனா காலக்கட்டத்தில் இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தின் பாபநாசம் கிளை சாா்பில் பல்வேறு நலப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதைத் தொடா்ந்து, பாபநாசம் ரயில் நிலையத்துக்குப் புங்கன், வேம்பு, மகிழம், பாதாம் உள்பட 50 மரக்கன்றுகளை நிலைய அலுவலா் ராம்குமாரிடம் செஞ்சிலுவைச் சங்கத்தின் பாபநாசம் கிளைப் புரவலரும், திமுக பிரமுகருமான நவநீதகிருஷ்ணன் புதன்கிழமை வழங்கினாா். மேலும் பயணிகள் அமருவதற்காக 6 பிளாஸ்டிக் நாற்காலிகளையும் வழங்கினாா்.

இந்நிகழ்வில் செஞ்சிலுவைச் சங்க உறுப்பினா் அன்பழகன், பாபநாசம் ரயில் பயணிகள் சங்கச் செயலா் சரவணன், ஜெயதேவன், செந்தில்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.