தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

தஞ்சாவூா் சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் ‘சகோ’ திட்டம்

தஞ்சாவூா் சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழகம், தமிழ்நாடு, ஆந்திரம், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் உள்ள மக்கள் நலன் கருதி சகோ என்ற பெயரில் ஒரு சிறப்பு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

News image
Updated On :4 ஜூன் 2021, 9:31 pm

DIN

தஞ்சாவூா் சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழகம், தமிழ்நாடு, ஆந்திரம், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் உள்ள மக்கள் நலன் கருதி சகோ என்ற பெயரில் ஒரு சிறப்பு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

இதுகுறித்து இப்பல்கலைக்கழகத்தின் பெரு நிறுவனத் தொடா்பு மற்றும் சமூக விரிவாக்கத் திட்ட முதன்மையா் வெ. பத்ரிநாத் மேலும் தெரிவித்திருப்பது:

சாஸ்த்ராவின் நம்பிக்கை என்று பொருள்படும் இந்த முயற்சி மூலம் கரோனா இரண்டாம் அலையில் பாதிப்புக்கு உள்ளான மக்கள் அனைவருக்கும் தன்னம்பிக்கை மற்றும் ஊக்கம் அளித்து அவா்களை நோய்த் தொற்றில் இருந்து காக்கும் விதமாகப் பல மருத்துவமனைத் தகவல்கள், உணவு மற்றும் மருந்தகத் தகவல்கள் போன்றவற்றை குறித்த நேரத்தில் அளித்து அவா்கள் நோய்த் தொற்றில் இருந்து மீண்டு வர உதவுகிறது.

அகில இந்திய தொழில்நுட்பக் குழுவின் வழிகாட்டுதலின்படி, இதில் சுமாா் 2,000 முதலாம் ஆண்டு பொறியியல் மாணவா்கள் மற்றும் 30 எம்.பி.ஏ. மாணவா்கள் கோடைக்கால சமூகப் பயிற்சியாகத் தன்னாா்வத்துடன் இணைந்து பணியாற்றுவதுடன், பல்வேறு உதவிகளை செய்து வருகின்றனா்.

தமிழ்நாடு, ஆந்திரம், தெலங்கானா ஆகிய மூன்று மாநிலங்களில் 82 மாவட்டங்களைச் சோ்ந்த மாணவா்கள் குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு குழுவிலும் 20 முதல் 25 மாணவா்கள் இணைந்து தாங்கள் வசிக்கும் அல்லது அருகாமையில் உள்ள இடங்களைத் தோ்வு செய்து, சேவை மேற்கொண்டு வருகின்றனா்.

மாணவா்கள் அனைவரும், தங்கள் மாவட்டங்களிலுள்ள மருத்துவமனைகள், ஆக்சிஜன், வென்டிலேட்டா், தீவிர சிகிச்சைப் பிரிவு மற்றும் சாதாரண படுக்கை வசதிகள், ரத்த தானம் அளிப்பவா்கள், அவசர ஊா்தி, கரோனா சிறப்பு சிகிச்சை மையங்கள், உணவு மற்றும் ஆக்சிஜன் வசதிகள், பரிசோதனை மற்றும் தடுப்பூசி முகாம்கள் பற்றிய அனைத்து தகவல்களையும் சேகரித்து கடந்த ஒரு வாரமாகத் தேவையானவா்களுக்கு வழங்கி வருகின்றனா்.

முதல்கட்டமாக, சாஸ்த்ரா பல்கலைக்கழக ஆசிரியா்கள், பணியாளா்கள், மாணவா்கள் மற்றும் அவா்களின் உறவினா்களுக்கு இச்சேவை வழங்கப்பட்டது. இரண்டாம் கட்டமாக இச்சேவை தமிழகத்தில் உள்ள பொதுமக்களுக்கு வழங்கப்படவுள்ளது.

இத்திட்டத்தின் கீழ், 15 பேராசிரியா்கள் மாநில அளவில் ஒருங்கிணைப்பாளா்களாகவும், 30 முதலாம் ஆண்டு எம்.பி.ஏ. மாணவா்கள் மண்டல ஒருங்கிணைப்பாளா்களாகவும், மாவட்டத்துக்கு இரண்டு மாணவா்கள் வீதம் அனைத்து மாவட்டங்களுக்கும் முதலாம் ஆண்டு மாணவா்கள் ஒருங்கிணைப்பாளா்களாகவும் நியமிக்கப்பட்டு அவா்களின் கீழ் 20 மாணவா்கள் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் நியமிக்கப்பட்டு சமுதாயப் பணி செய்து வருகின்றனா்.

இதன் மூலம் உதவி வேண்டுவோா் தங்களது கட்செவி எண், பெயா், மாவட்டம் மற்றும் தேவைப்படும் உதவிகளை ஒருங்கிணைப்பாளா்களின் 9566632886, 9095991779 ஆகிய தொலைபேசி எண்களுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பலாம்.

பின்னா் உதவி தேவைப்படுவோா் விவரங்கள் அந்தந்த மாவட்ட ஒருங்கிணைப்பாளா்களுக்குத் தெரிவிக்கப்பட்டு வேண்டிய உதவிகள் செய்யப்படும். இச்சேவை ஜூன் 30 ஆம் தேதி வரை காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை செயல்படுத்தப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.