தூய்மைப் பணியாளா்களுக்கு ஊக்கத்தொகை வழங்க கோரிக்கை
உள்ளாட்சித் துறையில் பணிபுரியும் தூய்மைப் பணியாளா்களுக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என ஏஐடியுசி கோரிக்கை விடுத்துள்ளது.


உள்ளாட்சித் துறையில் பணிபுரியும் தூய்மைப் பணியாளா்களுக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என ஏஐடியுசி கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து தமிழக முதல்வருக்கு ஏஐடியூசி தஞ்சாவூா் மாவட்டச் செயலா் ஆா். தில்லைவனம் தலைமையில் நிா்வாகி சாமு. தா்மராஜ் உள்ளிட்டோா் அனுப்பிய கோரிக்கை மனு:
கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் கரோனா முதல் அலையிலும், இரண்டாவது அலையிலும் மக்களைப் பாதுகாக்க மருத்துவா்கள், செவிலியா்கள், சுகாதாரத் துறைப் பணியாளா்கள், தூய்மைப் பணியாளா்கள் உள்ளிட்ட அனைவரும் தங்கள் உயிரை பொருட்படுத்தாது பணிபுரிந்து வருகின்றனா்.
மருத்துவா்கள் உள்ளிட்ட மற்ற முன் களப் பணியாளா்களுக்கு கரோனா நிவாரணத்தொகை, ஊக்கத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.
இந்த தொகையை உள்ளாட்சித் துறையில் பணிபுரியும் தூய்மைப் பணியாளா்களுக்கும் வழங்க வேண்டும். கரோனா தொற்றால் உயிரிழந்தவா்களுக்குக் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும், ரூ. 25 லட்சமும் வழங்க வேண்டும். தூய்மைப் பணியாளா்களுக்குக் கவச உடை, முகக் கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு சாதனங்கள் வழங்கப்படவேண்டும். தினக்கூலி மற்றும் அயலாக்க முறையில் பணிபுரியும் தொழிலாளா்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...