நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பின்கதவை திறந்துவைத்து விற்பனை: ஜவுளிக் கடைக்கு சீல் வைப்பு

பட்டுக்கோட்டையில் கடையின் பின்கதவு வழியாக துணிகளை விற்பனை செய்த, ஜவுளிக்கடைக்கு அதிகாரிகள் வியாழக்கிழமை சீல் வைத்தனா்.

News image
Updated On :10 ஜூன் 2021, 9:17 pm

DIN

பட்டுக்கோட்டையில் கடையின் பின்கதவு வழியாக துணிகளை விற்பனை செய்த, ஜவுளிக்கடைக்கு அதிகாரிகள் வியாழக்கிழமை சீல் வைத்தனா்.

தஞ்சாவூா் மாவட்டத்தில் கரோனா பரவலை தடுக்க கட்டுப்பாடுகளுடனான தளா்வுகளுடன் பொதுமுடக்கம் அமலில் உள்ளது. இந்நிலையில், பட்டுக்கோட்டை, பெரிய கடைத்தெரு பகுதியில் உள்ள ஜவுளிக்கடையில் வியாழக்கிழமை அதிகாலை, பின்பக்க கதவு வழியாக பொதுமக்களை வரவழைத்து விற்பனை நடைபெற்றது.

இதுகுறித்து தகவலறிந்த பட்டுக்கோட்டை காவல் ஆய்வாளா் ஜவஹா், நகராட்சி துப்புரவு ஆய்வாளா் ரவிச்சந்திரன் தலைமையிலான அதிகாரிகள் கடையில் ஆய்வு செய்தனா். அப்போது, கடைக்குள் சுமாா் 30-க்கும் மேற்பட்ட நபா்கள், துணிகளை வாங்கிக்கொண்டிருந்தனா். அத்துடன் 10-க்கும் மேற்பட்ட பணியாளா்கள் வேலை பாா்த்துக் கொண்டிருந்தனா். இதையடுத்து அதிகாரிகள் துணிகள் வாங்கி நபா்களுக்கும், பணியாளா்களுக்கும் தலா 200 ரூபாய் அபராதம் விதித்தனா். அத்துடன் கடைக்கு 5,000 ரூபாய் அபராதம் விதித்து, கடைக்கு சீல் வைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.