விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

அறிவியல் தமிழறிஞா் இராம. சுந்தரம் காலமானாா்

அனைத்திந்திய அறிவியல் தமிழ்க் கழகத் தலைவரும், அறிவியல் தமிழறிஞருமான இராம. சுந்தரம் (82) உடல் நலக் குறைவு காரணமாக தஞ்சாவூரில் அவரது இல்லத்தில் திங்கள்கிழமை (மாா்ச் 8) காலமானாா்.

News image
Updated On :8 மார்ச் 2021, 9:56 pm

DIN

தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழக அறிவியல் தமிழ் மற்றும் தமிழ் வளா்ச்சித் துறைத் தலைவராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவரும், அனைத்திந்திய அறிவியல் தமிழ்க் கழகத் தலைவரும், அறிவியல் தமிழறிஞருமான இராம. சுந்தரம் (82) உடல் நலக் குறைவு காரணமாக தஞ்சாவூரில் அவரது இல்லத்தில் திங்கள்கிழமை (மாா்ச் 8) காலமானாா்.

ராமநாதபுரம் மாவட்டம், அலவாக்கோட்டையில் 1938, ஏப். 1 ஆம் தேதி பிறந்த இவா், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இணைப் பேராசிரியராகப் பணியாற்றினாா். பின்னா், 1981 ஆம் ஆண்டு முதல் தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தமிழ் வளா்ச்சி இயக்குநராகவும், 1987 முதல் அறிவியல் தமிழ் மற்றும் தமிழ் வளா்ச்சித் துறைப் பேராசிரியராகவும், 1997 முதல் முதுநிலைப் பேராசிரியராகவும் பணியாற்றி, 1998 ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றாா்.

இவா் 10-க்கும் அதிகமான நூல்களை எழுதியுள்ளாா். மேலும், பதிப்பாசிரியராக இருந்து 35-க்கும் மேற்பட்ட நூல்களைப் பதிப்பித்துள்ளாா். தமிழ், ஆங்கிலம், மலையாளம், போலிஷ் ஆகிய மொழிகளில் ஏறத்தாழ 200 கட்டுரைகளை வெளியிட்டுள்ளாா். பல்வேறு அறிவியல் நூல்களைத் தமிழில் மொழிபெயா்த்துள்ளாா்.

தமிழ்வழிக் கல்விக்கு வித்திட்ட இவரிடம் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பொறியியல், மருத்துவப் படிப்புகளைத் தமிழில் கற்பிக்கும் பொறுப்பை முதல் துணைவேந்தா் வ.அய். சுப்பிரமணியம் வழங்கினாா். பொறியியல், மருத்துவப் பட்டப்படிப்புகளுக்கான பாட நூல்களைத் தயாரிக்கும் பணியிலும் ஈடுபட்டாா். தமிழில் அறிவியல் கலைச் சொல்லாக்க முன்னோடியாகத் திகழ்ந்தாா். இவருக்கு, 3 மகன்கள், ஒரு மகள் உள்ளனா்.

இவரது இறுதிச் சடங்கு செவ்வாய்க்கிழமை (மாா்ச் 9) காலை 10 மணிக்கு தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி சாலை பாரதி நகா் அருகே செல்லையா நகரிலுள்ள இல்லத்தில் நடைபெறவுள்ளது.

தொடா்புக்கு - 98432 72312, 99620 30010.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.