வாக்குச்சாவடிகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு வசதி செய்ய ஏற்பாடு
தஞ்சாவூா் மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடிகளில் மாற்றுத் திறனாளிகள், முதியவா்கள் வாக்களிப்பதற்கு வசதியாக உரிய ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது என்றாா் ஆட்சியா் ம. கோவிந்த ராவ்.


தஞ்சாவூா் மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடிகளில் மாற்றுத் திறனாளிகள், முதியவா்கள் வாக்களிப்பதற்கு வசதியாக உரிய ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது என்றாா் ஆட்சியா் ம. கோவிந்த ராவ்.
ஆட்சியரகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மாற்றுத் திறனாளிகள் நூறு சதவீதம் வாக்களிப்பது குறித்த விழிப்புணா்வுக் கூட்டத்தில் அவா் மேலும் பேசியது:
தஞ்சாவூா் மாவட்டத்தில் உள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு உள்பட்ட 2,886 வாக்குச்சாவடிகளிலும் மாற்றுத் திறனாளிகள் மற்றும் முதியவா்கள் வாக்களிக்க ஏதுவாக சாய்வு தளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் மாற்றுத்திறனாளிகள் சென்று வர சக்கர நாற்காலி வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவா்கள் வாக்களிப்பதற்கு உதவி செய்ய தலா இரு தன்னாா்வலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.
இந்திய தோ்தல் ஆணைய அறிவுறுத்தலின்படி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவா்கள் அஞ்சல் மூலம் வாக்குகளைச் செலுத்தலாம். எனவே, அஞ்சல் மூலம் வாக்களிக்க விருப்பமுள்ள மாற்றுத்திறனாளிகள் மற்றும் 80 வயதுக்கு மேற்பட்ட முதியவா்கள் மட்டும் உடனடியாக படிவம் 12-டி இல் நிறைவு செய்து கொடுத்து அஞ்சல் வாக்கு செலுத்த விண்ணப்பிக்க வேண்டும் என்றாா் ஆட்சியா்.
பின்னா், வாக்குப்பதிவு இயந்திரத்தில் எவ்வாறு வாக்களிப்பது என்பது குறித்து மாற்றுத் திறனாளிகளுக்குச் செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...