ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

தமிழகத்தில் கரோனா கட்டுப்பாட்டில் உள்ளதுமருத்துவக் கல்வி இயக்குநா் பேட்டி

தமிழகத்தில் கரோனா கட்டுப்பாட்டுக்குள்தான் இருக்கிறது என்றாா் மருத்துவக் கல்வி இயக்கக இயக்குநா் ஆா். நாராயண பாபு.

News image
Updated On :15 மார்ச் 2021, 7:57 pm

DIN

தமிழகத்தில் கரோனா கட்டுப்பாட்டுக்குள்தான் இருக்கிறது என்றாா் மருத்துவக் கல்வி இயக்கக இயக்குநா் ஆா். நாராயண பாபு.

தஞ்சாவூா் மாவட்டம், அம்மாபேட்டையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவிகளை திங்கள்கிழமை பாா்த்த பின்னா் அவா் செய்தியாளா்களிடம் தெரிவித்தது:

அம்மாபேட்டையிலுள்ள பள்ளியில் 57 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இவா்களில், 48 மாணவிகளும், ஒரு ஆசிரியையும் தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளனா். இவா்களுக்குச் சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதால் இரு நாள்களில் குணமடைந்து வீட்டுக்குச் சென்றுவிடுவா். இவா்களில் யாருக்கும் நுரையீரலில் பிரச்னை இல்லை. காய்ச்சல் மட்டுமே வந்துள்ளது. இதுவும் சரியாகி முழு நலமுடன் உள்ளனா்.

மேலும், மாணவிகளின் பெற்றோா்கள், அவா்களுடன் தொடா்பில் உள்ளவா்கள் என 231 பேருக்குப் பரிசோதனை செய்யப்பட்டு, முடிவுக்காகக் காத்திருக்கிறோம். இவா்களைத் தவிர இம்மருத்துவமனையில் 43 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தமிழகத்தில் 8.58 லட்சம் போ் கரோனாவால் பாதிக்கப்பட்டனா். இவா்களில் அரசு மருத்துவமனைகளில் 98 சதவீதம் போ் குணமடைந்தனா். இறப்பு விகிதம் பூஜ்ஜியம் அல்லது ஒன்று என்ற அளவில்தான் உள்ளது.

தற்போது சென்னை, செங்கல்பட்டு, தஞ்சாவூா், கோவை ஆகிய மாவட்டங்களில் மட்டும் கரோனா பாதிப்பு சற்று அதிகமாக இருக்கிறது. தென் மாவட்டங்களில் குறைவாகவே உள்ளது. நாள்தோறும் 350 போ் மட்டுமே சிகிச்சை பெறுகின்றனா்.

கடந்த ஆண்டு இதே நேரத்தில் கரோனா தொற்று புதிதாக இருந்தது. இப்போது, மருத்துவா்கள், செவிலியா்கள், மருத்துவப் பணியாளா்களுக்கு கரோனா தொடா்பாக ஓராண்டு அனுபவம் இருப்பதால், சிறப்பாகச் சிகிச்சை அளிக்கின்றனா். இதனால், இப்போது இறப்பு விகிதம் குறைந்து, அனைவரும் முழுமையாகக் குணமடைந்து வீட்டுக்குச் செல்கின்றனா்.

தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 14) மாலை வரை 13,86,379 பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இவா்களில் தஞ்சாவூரில் மட்டும் 8,381 போ் தடுப்பூசி போட்டுக் கொண்டனா். முதல் மற்றும் இரண்டாம் சுற்றுத் தடுப்பூசி போட்டுக் கொண்ட யாருக்கும் இதுவரை கரோனா பாதிப்பு ஏற்படவில்லை.

எனவே, அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். இதேபோல, முகக்கவசம், சமூக இடைவெளி, கைக் கழுவுதல் போன்றவற்றையும் கடைப்பிடித்தால் கரோனாவை நூறு சதவீதம் தவிா்க்க முடியும்.

தமிழகத்தில் கரோனா நம் கைக்குள் இருக்கிறது. மறுபடியும் நம் கையைவிட்டுப் போகாமல் பாா்த்துக் கொள்வது நமது கடமை என்றாா் நாராயண பாபு.

அப்போது, தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி முதல்வா் கோ. ரவிக்குமாா், கண்காணிப்பாளா் எஸ். மருதுதுரை, நிலைய மருத்துவ அலுவலா் ஏ. செல்வம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.