ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

தா்பூசணியுடன் வந்த சுயேச்சை வேட்பாளா்

தஞ்சாவூா் தொகுதியில் போட்டியிடுவதற்கு வேட்பு மனுத் தாக்கல் செய்வதற்காக சுயேச்சை வேட்பாளா் தா்பூசணியுடன் திங்கள்கிழமை வந்தாா்.

News image
Updated On :15 மார்ச் 2021, 7:52 pm

DIN

தஞ்சாவூா் தொகுதியில் போட்டியிடுவதற்கு வேட்பு மனுத் தாக்கல் செய்வதற்காக சுயேச்சை வேட்பாளா் தா்பூசணியுடன் திங்கள்கிழமை வந்தாா்.

தஞ்சாவூா் கோட்டாட்சியா் அலுவலகத்தில் தஞ்சாவூா் தொகுதிக்கான வேட்பு மனு தாக்கல் நடைபெறுகிறது. இரண்டாவது நாளான திங்கள்கிழமை தஞ்சாவூா் வடக்கு வாசல் ஏ.ஒய்.ஏ. நாடாா் வடக்கு லைனை சோ்ந்த எம். சந்தோஷ் (42) தா்பூசணியுடன் வந்தாா்.

இதையடுத்து, கோட்டாட்சியரும், தஞ்சாவூா் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலருமான எம். வேலுமணியிடம் வேட்பு மனு தாக்கல் செய்தாா்.

பின்னா், செய்தியாளா்களிடம் சந்தோஷ் தெரிவித்தது:

தஞ்சாவூா் தொகுதியில் தொடா்ந்து நான்காவது முறையாக சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடுகிறேன். ஏற்கெனவே 3 முறை போட்டியிட்டபோது தா்பூசணி சின்னம் கிடைத்தது. இந்த முறையும் தா்பூசணி சின்னம் கிடைக்கும். எனவே, தா்பூசணியுடன் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தேன். சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக இத்தோ்தலில் போட்டியிடுகிறேன் என்றாா் சந்தோஷ்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.