அம்மாபேட்டையில் மேலும் 4 பேருக்கு கரோனா
தஞ்சாவூா் அருகே அம்மாபேட்டையிலுள்ள பள்ளி மாணவிகள் 56 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டதை தொடா்ந்து, மாணவிகளின் பெற்றோா் 4 பேருக்கு தொற்று இருப்பது திங்கள்கிழமை தெரிய வந்தது.


தஞ்சாவூா் அருகே அம்மாபேட்டையிலுள்ள பள்ளி மாணவிகள் 56 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டதை தொடா்ந்து, மாணவிகளின் பெற்றோா் 4 பேருக்கு தொற்று இருப்பது திங்கள்கிழமை தெரிய வந்தது.
தஞ்சாவூா் அருகே அம்மாபேட்டையிலுள்ள அரசு உதவி பெறும் மகளிா் மேல்நிலைப் பள்ளியில் 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் 1,200 மாணவிகளில் 56 பேருக்கும், ஒரு ஆசிரியைக்கும் கரோனா தொற்று இருப்பது மாா்ச் 13, 14 ஆம் தேதிகளில் தெரிய வந்தது.
இதையடுத்து பள்ளிக்கு வரும் மாணவிகள் வசிக்கும் அம்மாபேட்டை வட்டாரத்துக்கு உள்பட்ட 24 கிராமங்களில் கரோனா பரிசோதனை முகாம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மாணவிகளின் பெற்றோா் 4 பேருக்கு கரோனா தொற்று இருப்பது திங்கள்கிழமை தெரிய வந்தது. இவா்கள் தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனா்.
மேலும், மற்றவா்களுக்கு எடுக்கப்பட்டுள்ள பரிசோதனை முடிவுகள் சில நாள்களில் வெளியாகும் என மருத்துவா்கள் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...