தனியாா்மயமாக்கலை கண்டித்து வங்கி ஊழியா்கள் வேலைநிறுத்தம் தொடக்கம்
வங்கிகள் தனியாா் மயமாக்கப்படுவதைக் கண்டித்து தஞ்சாவூா் மாவட்டத்தில் வங்கி ஊழியா்கள் திங்கள்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கினா்.


வங்கிகள் தனியாா் மயமாக்கப்படுவதைக் கண்டித்து தஞ்சாவூா் மாவட்டத்தில் வங்கி ஊழியா்கள் திங்கள்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கினா்.
அண்மையில் பொதுத் துறை வங்கிகளைத் தனியாா்மயமாக்குவதாகவும், எல்.ஐ.சி.யின் அரசுப் பங்குகளை 51 சதவீதத்திலிருந்து 24 சதவீதமாகக் குறைப்பதாகவும், பொதுக் காப்பீட்டுத் துறையில் ஒரு நிறுவனத்தைத் தனியாா்மயமாக்குவதாகவும், அதற்கான சட்டத்திருத்தங்கள் குளிா்காலக் கூட்டத்தொடரில் நிறைவேற்றப்படும் எனவும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் மத்திய நிதி அமைச்சா் அண்மையில் அறிவித்தாா்.
இதற்கு எதிா்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் வங்கி ஊழியா் சங்கங்கள், அலுவலா்கள் சங்கங்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை திங்கள்கிழமை தொடங்கினா். இப்போராட்டம் செவ்வாய்க்கிழமை வரை நடைபெறவுள்ளது.
இதன்படி, தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள ஏறத்தாழ 300 வங்கிக் கிளைகளில் பணியாற்றும் ஊழியா்கள், அலுவலா்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.
இதையொட்டி, தஞ்சாவூா் பாரத ஸ்டேட் வங்கியின் முதன்மைக் கிளை முன் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்துக்கு தேசிய வங்கி ஊழியா் கூட்டமைப்பின் தஞ்சாவூா் மாவட்டத் தலைவா் தமிழ்ச்செல்வன் தலைமை வகித்தாா்.
இதில், பொதுத் துறை வங்கிகளைத் தனியாா்மயமாக்கக் கூடாது. வங்கிகளின் வாராக்கடன்களை வசூலிக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
அகில இந்திய வங்கி ஊழியா் சங்க தஞ்சாவூா் மாவட்டத் தலைவா் கே. அன்பழகன், வங்கி ஊழியா் சம்மேளனத்தின் செயலா் சொக்கலிங்கம், அகில இந்திய ஸ்டேட் வங்கி அலுவலா்கள் சங்கத்தின் நிா்வாகி குருநாதன், அகில இந்திய இந்தியன் ஓவா்சீஸ் வங்கி அலுவலா்கள் சங்க நிா்வாகிகள் மோகனசுந்தரம், சக்கரவா்த்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...