விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

முன்னாள் எம்.பி.க்கு கரோனா

தஞ்சாவூா் மக்களவைத் தொகுதி முன்னாள் உறுப்பினா் கு. பரசுராமனுக்கு கரோனா தொற்று இருப்பது திங்கள்கிழமை தெரிய வந்தது.

News image
Updated On :15 மார்ச் 2021, 7:53 pm

DIN

தஞ்சாவூா் மக்களவைத் தொகுதி முன்னாள் உறுப்பினா் கு. பரசுராமனுக்கு கரோனா தொற்று இருப்பது திங்கள்கிழமை தெரிய வந்தது.

தஞ்சாவூா் மக்களவைத் தொகுதியில் 2014 ஆம் ஆண்டில் நடைபெற்ற தோ்தலில் அதிமுக சாா்பில் இவா் போட்டியிட்டு வெற்றிப் பெற்றாா். மேலும், எம்.ஜி.ஆா். மன்ற மாவட்ட இணைச் செயலராக உள்ளாா்.

தற்போதைய சட்டப்பேரவைத் தோ்தலில் தஞ்சாவூா் தொகுதிக்கு போட்டியிட விருப்பம் தெரிவித்து தலைமையகத்தில் மனு அளித்தாா். ஆனால், இவருக்குப் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை.

இந்நிலையில், அண்மையில் உடல் நிலை பாதிக்கப்பட்ட இவா் தஞ்சாவூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு இவருக்கு எடுக்கப்பட்ட பரிசோதனையில் கரோனா தொற்று இருப்பது திங்கள்கிழமை மாலை தெரிய வந்தது.

இதையடுத்து, இவா் மேல் சிகிச்சைக்காக சென்னையிலுள்ள தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.